மறுக்காமல் ‘ஒப்புக்கொண்ட’ கோலி... ‘இந்திய’ அணிக்கு ‘40% அபராதம்’ விதித்த ‘ஐசிசி’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்களுக்கு 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 4வது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி ட்ராவில் முடிய, சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இந்தத் தொடரில் முன்னனியில் உள்ளது. நாளை நடைபெற உள்ள 5வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வொயிட் வாஷ் செய்து தொடரைக் கைப்பற்றும்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4வது டி20 போட்டியில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்தை விட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது இருந்த கள நடுவர்கள் கிறிஸ் பிரவுன், ஷான் ஹெய்க் மற்றும் 3வது நடுவரான ஆஷ்லே மெஹ்ரோத்ரா ஆகியோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் அதை மறுக்காமல் ஒப்புக்கொண்டதால் இதுகுறித்து அடுத்தக்கட்ட விசாரணை தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

CRICKET, VIRATKOHLI, TEAMINDIA, INDVSNZ, FINE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்