‘இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும்’... 'முதல் போட்டியே சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தான்’... ‘வாய்ப்பு கிடைத்தது எப்படி?’... ‘வெளியான தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனாவுக்குப் பின், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 2 டெஸ்ட் போட்டியை நடத்த சேப்பாக்கம் மைதானத்துக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையிலான போட்டித் தொடர் கைவிடப்பட்டது. அதன்பின்னர் உள்ளூர் போட்டியான ஐபிஎல் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் கைவிடப்பட்டு, கடைசியில் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கிற்குப் பின் முதன்முதலாக இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 ஒருநாள், 3 டி20 முடிவடைந்த நிலையில், வரும் 17-ம் தேதி முதல் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. இந்நிலையில், 2021-ம் ஆண்டு முதல் இந்தியாவில் போட்டிகள் நடத்த உத்தேசம் செய்யப்பட்டு, அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது.
இதையடுத்து இந்தியா-இங்கிலாந்து போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி இலங்கையில் போட்டியை முடித்துவிட்டு, ஜனவரி 27-ந் தேதி சென்னை வருகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவில் 60 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இதில், முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம மைதானத்தில் நடக்கிறது.
பிப்ரவரி 5 முதல் 9-ந் தேதி வரையிலும், பிப்ரவரி 13 முதல் 17-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதற்கிடையே முதல் 2 டெஸ்ட் போட்டியை நடத்த சேப்பாக்கம் மைதானத்துக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டியை மொகாலியில் நடத்ததான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருந்தது.
சேப்பாக்கம் ஆடுகளம் இந்திய பந்துவீச்சுக்கு உகந்தது என்பதால் சென்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து சென்னைக்கு வருவதுதான் மிகவும் எளிதானது. கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம். இதன் காரணமாகவும் சென்னை சேப்பாக்கம் மைதானம் முதல் 2 டெஸ்டுக்கு தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இந்த டெஸ்டில்தான் கருண்நாயர் டிரிபிள் சதம் அடித்திருந்தார். ராகுல் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார். இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஸ்டேடியத்துக்குள் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து அடுத்த மாதம் கிரிக்கெட் வாரியம் மத்திய அரசுடன் ஆலோசனை செய்து அதன்பிறகு முடிவு செய்ய உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கங்குலியின் பிளானுக்கு எழுந்த அடுத்தடுத்த சிக்கல்?!!'... 'மெகா Auction இருக்கா, இல்லையா???'... 'புது பிளான் போடும் பிசிசிஐ!!!'...
- ‘கொரோனாவுக்குப் பின் முதன்முறையாக நடக்கும் போட்டி’... ‘அதுவும் சென்னையில் தான் பர்ஸ்ட்’... ‘பிசிசிஐ வெளியிட்ட அட்டவணை’...!!!
- 'சென்னையில் இந்த ஏரியாவில்’... ‘ஜனவரி முதல் மெட்ரோ ரயில் சேவை’... ‘வெளியான தகவல்’...!!!
- ‘பேட்டிங் ஃபார்மில் செமையாக இருந்தும்’... ‘டெஸ்ட் போட்டியில் இல்லாத ஆல்ரவுண்டர்’... ‘வெளியான உண்மையான காரணம்’...!!!
- 'கொரோனாவா அப்படின்னா???'... 'இதுவரைக்கும் ஒருத்தருக்குகூட பாதிப்பில்ல!!!'... 'மாஸ்க், சானிடைசர்னு எதுவுமே கிடையாது!!!'... 'இந்தியாவுல இன்னும் இப்படி ஒரு இடமா?!!'...
- "இனிதான் நடராஜனுக்கு சிக்கலே இருக்கு... இதுல மட்டும் கவனமா இல்லன்னா"... 'குவியும் பாராட்டுகளுக்கு நடுவே'... 'எச்சரித்துள்ள சேவாக்!!!'...
- Video: ‘கொலையா? தற்கொலையா?’.. வெளியான ‘பரபரப்பு’ பிரேத பரிசோதனை முடிவு! வீடு வந்து சேர்ந்த சித்ராவின் பூத உடல்! கதறி அழும் மக்கள்!
- ‘தனி ஒருவரை சார்ந்து மட்டுமே அணி இல்ல’... ‘இந்த நேரத்தை இளைஞர்கள் யூஸ் பண்ணிக்கனும்’... ‘கிரிக்கெட் ஜாம்பவான் கருத்து’...!!!
- 'ஐபிஎல்லுக்கு தயாராகும் ரெய்னா?!!'... 'வெளியான திடீர் அறிவிப்பால்'... 'எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள்!!!'...
- நடராஜனிடம் 'இத' கவனிச்சீங்களா?.. 'மேட்ச்'ல அவரு அசத்துறதுக்கு... இது தான் காரணம்!.. புகழ்ந்து தள்ளிய சக வீரர்கள்!.. சீக்ரெட்டை உடைத்த கேப்டன் கோலி!