'அவரு வேற லெவல் டேலண்ட்'!.. ஜாம்பவான்களின் பாராட்டுகளை அள்ளிய இளம்வீரர்!.. அவரோட ஸ்பெஷாலிட்டியே 'இது' தான்!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில், இளம் வீரர் ஒருவர் ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 337 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

மூன்றாம் நேர ஆட்டநேர முடிவில் புஜாரா மற்றும் பண்ட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க, அதன் பின்னர் இந்திய அணியை கரை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் ஆகியோர் விளையாடினார்கள்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் ஜோடி இன்று இணைந்து ஓரளவு சுமாரான ஸ்கோரை எட்ட உதவியது. சுந்தர் உடன் உறுதுணையாக விளையாடிய அஸ்வின் 31 ரன்கள் எடுத்து வெளியேற அதன் பின்னர் வந்த நதீம், இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆனால் ஒருபுறம் வாஷிங்டன் சுந்தர் மட்டும் அற்புதமாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்களை குவித்தார்.

வாஷிங்டன் சுந்தரின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இப்படித்தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் கடைசி போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் உடன் இணைந்து சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை மீட்டார். அந்த போட்டியில் அவர் அரைசதம் அடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2வது முறையாக வாய்ப்பைப் பெற்ற சுந்தர், பேட்டிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும், அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கான பாராட்டுகளையும் அவர் பெற்று வருகிறார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

இந்த போட்டியில் சுந்தரின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் பிரமாதமாக இருக்கிறது. எப்பேர்பட்ட திறமையுள்ள வீரர் இவர் என்று பதிவிட்டிருக்கிறார். அதே போல இன்னொரு முன்னாள் வீரர் தன்னால் எப்போதும் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்பதை வாஷிங்டன் சுந்தர் இக்கட்டான சூழ்நிலையிலும் நிரூபித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல பல்வேறு கிரிக்கெட் வர்ணனையாளர்களும் சுந்தரின் இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி வருவதால் தற்போது வாஷிங்டன் சுந்தர் பாராட்டு மழையில் நனைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது, "வாஷிங்டன் சுந்தர் - அஸ்வின் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஒருவேளை தொடக்கத்திலேயே அவுட் ஆகியிருந்தால் இங்கிலாந்து அணியின் மிகவும் வலுப்பெற்று இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

மேலும், "வாஷிங்டன் சுந்தரின் இன்றைய கிரிக்கெட் ஷாட்கள் மிக அற்புதமாக இருந்தது. அவர் சதம் அடித்திருக்க வேண்டும், ஆனால் 7வது வீரராக களம் இறங்குபவர்கள் சதம் அடிப்பது கடினம், எனினும் சுந்தரின் 85 நாட் அவுட் என்பது சதமடித்ததற்கு சமமாகும்" என்றும் கவாஸ்கர் பாராட்டி உள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்