'வங்கதேசம் தொடர்'... 'டி20 கேப்டனான ரோகித்'... 'தோனி’யின் வருகை எப்போது?... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வங்கதேச அணி,  3 டி-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி, வரும் நவம்பர் 3-ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. இந்த டி20 தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு  ஓய்வளிக்கப்பட்டு, கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான அணியில், இளம் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ஆல்-ரவுண்டர் சிவம் துபே இடம்பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, வரும் நவம்பர் 14-ம் தேதி இந்தூரில் தொடங்குகிறது. டெஸ்ட் அணிக்கு வழக்கம் போல், விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உலகக் கோப்பைக்கு பின்னர், எந்த போட்டியிலும் பங்கேற்காமல் மூத்த வீரர் தோனி ஓய்வு எடுத்து வருகிறார். வங்க தேசத் தொடரிலாவது தோனி பங்கேற்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில், இதிலும் அவர் விளையாடவில்லை.

இதற்கிடையில், இந்திய அணிக்கு திரும்பும் வகையில் தோனி, ஜார்கண்டில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பின்னர், அவர் ஜார்கண்ட் யு-23 அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ள உள்ளார். அதன்பின்னர், இந்தியாவிற்கு வரும் மேற்கிந்திய தீவுகள், அல்லது வரும் 2020-ம் ஆண்டு துவக்கத்தில் ஜனவரி மாதம், இலங்கை அணிக்கு எதிரான தொடரில், நிச்சயம் தோனி பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்