‘பிரபல கேப்டனுக்கு’.. ‘2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை’.. ‘ஐசிசி அதிரடி’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சூதாட்டம் தொடர்பான தகவலைத் தெரிவிக்காத வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது வங்கதேச அணி. இந்த தொடரில் பங்கேற்பதற்கு ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூதாட்டம் தொடர்பான தகவலைத் தெரிவிக்காததற்காக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டக்காரர் ஒருவர் ஷாகிப் அல் ஹசனை அணுகியுள்ளார். அதேபோல 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போதும் அவரிடம் மேட்ச் ஃபிக்சிங் செய்ய இடைத்தரகர்கள் அணுகியுள்ளனர். ஆனால் இதுகுறித்து அவர் ஐசிசியின் ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதன்காரணமாகவே அவருக்கு தற்போது 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஷாகிப் அல் ஹசன் தன் தவறை ஒப்புக்கொண்டதால் அவரின் தடைக் காலத்தை ஓராண்டாக குறைத்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இந்த தடையால் வங்கதேச அணிக்கு மூத்த வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், மஹ்மதுல்ல ரியாத் டி20 கேப்டனாகவும் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BANGLADESH, INDIA, SHAKIBALHASAN, ICC, BAN, IPL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்