‘என்ன கேப்டன் இப்டி பண்ணிட்டீங்க… நம்பிக்கையே போச்சு..!’- இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் மேட்ச்சால் புலம்பும் ட்விட்டர்வாசிகள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி இன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளை சற்று தொய்வுடனேயே விளையாடத் தொடங்கி உள்ளது. டி20 தொடர் வெற்றிக்குப் பின்னர் நியூசிலாந்து அணியை எளிதாகக் கடந்துவிடாமல் இந்திய அணி தொடர்ந்து ஆதரடியாக விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர்.

Advertising
>
Advertising

முதல் போட்டியில் விராட் கோலி பங்குபெறாததால் இந்திய அணியின் கேப்டன் ஆக ரஹானே பொறுப்பு ஏற்றுள்ளார். கேப்டன் பொறுப்புடன் ரஹானே தனது பேட்டிங் மீதும் அதிகப்படியாகவே கவனம் செலுத்த வேண்டும் எனப் பல முன்னாள் இந்திய வீரர்கள் ரஹானேவுக்கு அறிவுரைகளை வாரி வழங்கி வந்தனர். சமீப காலமாக சரியான ஃபார்மில் இல்லாமல் தவித்து வரும் ரஹானே இன்று அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்ப்புகளை உடைக்கும் வகையில் வெறும் 35 ரன்களுக்கு ரஹானே அவுட் ஆனார். இந்த டெஸ்ட் சீரிஸில் ரஹானே ரன்களைக் குவிக்கத் தவறினால் அவர் இடத்தை நிரப்ப ஒரு பெரிய வரிசையே காத்திருப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் ரஹானேவின் மோசமான தோல்வி ட்விட்டர்வாசிகளால் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ரஹானே குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில், "2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ரஹானேவின் ஆட்டம் சொல்லிக்கொள்வது போல் இல்லை. விராட், ரோகித் மற்றும் டிராவிட் ஆகிய மூவருமே ரஹானேவை தூக்கிப் பிடித்து நிறுத்துகிறார்கள். ஆனால், இந்த டெஸ்ட் சீரிஸில் அவர் ரன்கள் குவிக்கத் தவறினால் நிச்சயம் அவருக்குப் பின் நிற்கும் நீண்ட வரிசை அவர் இடத்தை நிரப்ப வரும். சொல்லப்போனால் சூர்யகுமார் உட்பட பலர் காத்து நிற்கிறார்கள்” எனப் பேசியுள்ளார்.

CRICKET, INDVSNZ, AJINKYA RAHANE, TEAM INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்