இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா…. பிசிசிஐ வெளியிட்ட புதிய அணியில் இடம்பெற்ற வீரர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅயர்லாந்து அணிக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டனாக ஹர்திக்…
இந்தியா ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகளுக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் இந்த சுற்றுப்பயணத்தில் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார். அவருக்கு உதவியாக ஷிதான்ஷு கோடக் (பேட்டிங் பயிற்சியாளர்), சாய்ராஜ் பஹுதுலே (பந்துவீச்சு பயிற்சியாளர்) மற்றும் முனிஷ் பாலி (பீல்டிங் பயிற்சியாளர்) ஆகியோர் செயல்படுவார்கள்.
இந்த 17 பேர் கொண்ட அணிக்கு கேப்டனாக சமீபத்தில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். அணியில், ராகுல் திரிபாதி மற்றும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
17 பேர் கொண்ட இந்திய அணி…
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஷ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டி…
இதே நேரத்தில் மற்றொரு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட ஆயத்தமாகி வருகிறது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி மட்டும் நடக்காத நிலையில் தற்போது அந்த போட்டி நடக்க உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அப்படி போடு… முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பென்ஷன் உயர்வு… BCCI அறிவித்த சூப்பர் தகவல்
- "எல்லாரும் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க.. உண்மையா என்ன நடந்துதுன்னா.." நீண்ட நாளாக இருந்த குழப்பம்.. போட்டு உடைத்த ஹர்திக்
- “புகழப்படாத ஹீரோக்கள்”.. IPL இவ்ளோ சிறப்பா நடக்க காரணமே இவங்கதான்.. பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு..!
- Level 1 விதிமீறலில் ஈடுபட்ட பிரபல வீரர் ? … இன்னைக்கு ரெண்டாவது Qualifier … கண்டித்த பிசிசிஐ.. பரபரப்பு தகவல்
- “தினேஷ் கார்த்திக் மாதிரி அவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கணும்”.. சீனியர் வீரருக்காக குரல் கொடுத்த ரெய்னா..!
- IPL இறுதிப்போட்டியில் திடீர் மாற்றம்.. 30 நிமிஷம் லேட்டா தான் மேட்ச் ஆரம்பிக்கும்.. என்ன காரணம்..?
- IPL 2022 : பிளே ஆப், ஃபைனல்ஸ் எங்க, எப்போ நடக்க போகுது??.. 'BCCI' வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
- "என்னய்யா இங்க இருந்த 'Stump'அ காணோம்.." மீண்டும் மிரட்டிய நடராஜன்.. "Team India'ல ஒரு இடம் பார்சல்.."
- IPL 2022: சட்டுன்னு ஆரஞ்ச் தொப்பியைக் கழட்டிய பட்லர்… இதுதான் காரணமா? ஹார்ட்டின் விட்ட fans!
- “நாங்க வேணா அம்பயர் அனுப்பட்டுமா”.. விராட் கோலி அவுட் சர்ச்சை.. பிசிசிஐயை கிண்டலடித்த நாடு..!