VIDEO: ‘ஆட்டம் ஆரம்பம்’!.. புது கோச், புது கேப்டன்.. வெறித்தனமான வீடியோ வெளியிட்ட பிசிசிஐ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்ட வீடியோவை பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

VIDEO: ‘ஆட்டம் ஆரம்பம்’!.. புது கோச், புது கேப்டன்.. வெறித்தனமான வீடியோ வெளியிட்ட பிசிசிஐ..!
Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. இந்த நிலையில் நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் டி20 போட்டி நாளை (17.11.2021) ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.

India take on New Zealand in the 1st T20I in Jaipur

இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகினார். அதேபோல் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலும் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிந்துவிட்டது.

அதனால் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் டி20 அணிக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் இணைந்து எதிர்கொள்ள உள்ள முதல் கிரிக்கெட் தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

INDVNZ, TEAMINDIA, ROHITSHARMA, RAHULDRAVID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்