ஆசிய கோப்பை தொடர் : "இந்திய அணிக்கு இப்டி ஒரு சிக்கல் வந்துடுச்சே.." சமாளிக்குமா 'ரோஹித் அண்ட் கோ?'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களை அடுத்தடுத்து வென்று அசத்தியுள்ள இந்திய அணி, அடுத்தாக ஆசிய கோப்பைக்கும் தயாராகி வருகிறது.

Advertising
>
Advertising

கடைசியாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றி அசத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இந்த ஆசிய போட்டிக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது. இதில், ஏ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் அணியும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் ஆடுகின்றன. ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம், ஆகஸ்ட் 28 ஆம் தேதி துபாயில் வைத்து நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கோப்பைக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி ஆசிய கோப்பையில் களமிறங்க உள்ள நிலையில், கே எல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்திய அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக் ஆசிய கோப்பை தொடருக்கும் தேர்வாகி உள்ளார்.

சமீபத்திய தொடர்களில் இந்திய அணிக்காக களமிறங்கி கலக்கி வரும் இளம் வீரர்களான ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால், அதே வேளையில் காயம் காரணமாக முக்கிய வீரர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளது, இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால், பந்து வீச்சில் இந்திய அணிக்கு ஒரு சிறிய சறுக்கல் உருவாகி உள்ளதாக தெரிகிறது. பும்ராவை போல, மற்றொரு பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலும் காயம் காரணமாக, ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி விவரம் : ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஷ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்

ROHIT SHARMA, JASPRIT BUMRAH, IND VS PAK, ASIA CUP 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்