வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான வீரர்கள் தேர்வு திடீர் ஒத்திவைப்பு..! காரணம் என்ன..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு தொடர்பான கூட்டம் இன்று தேர்வு குழு தலைவர் எம்.கே.பிரசாத் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கூட்டம் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் போது காயம் அடைந்த வீரர்களின் உடற்தகுதி அறிக்கை வரும் சனிக்கிழமைதான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வீரர்களின் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விராட் கோலி மற்றும் பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் அணியில் தோனியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு..’ முற்றுப்புள்ளி வைத்துள்ள அணி நிர்வாகம்..
- ‘இதுல கோலி சொல்றதுக்கெல்லாம் எதுவும் இல்ல..’ பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்..
- ‘தோனியின் ஓய்வு முடிவு’... 'சிஎஸ்கே அணி சிஇஓ-வின் பதில் இதுதான்'!
- இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்? ..வெளியான புது தகவல்..!
- 'உலகக்கோப்பை வெற்றியை சரியாக கணித்த 'ஜோதிடர்'... 'தோனி'யின் ஓய்வு குறித்து பரபரப்பு தகவல்'!
- ‘வெஸ்ட் இண்டீசில் அசத்தும் இந்திய ‘ஏ’ அணி’... ‘தொடரை வென்று இளம் வீரர்கள் சாதனை'!
- உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு.. ‘தனது முடிவைத் தெரிவித்துள்ள விராட் கோலி..’
- ‘எல்லாரும் சொல்றது சரிதான்..’ ஓய்வு குறித்துப் பேசியுள்ள தோனியின் பெற்றோர்..
- 'இவரு கேப்டன்ஷிப்ல கோப்பையை ஜெயிச்சிடக் கூடாதுனுதான்.. அவரு இப்படி ஆடுனாரு'.. பிரபல வீரரின் தந்தை!
- 'இது லிஸ்ட்லயே இல்லயே?'.. வயசானப்புறம் கிரிக்கெட் வீரர்கள் எப்படி இருப்பாங்க?.. தத்ரூப படங்கள்!