அவரை மாதிரி ஒருத்தர் இனி கிடைக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்.. பல வருசமா காலியாக இருக்கும் இடம்.. கம்பீர் காட்டம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஆல்ரவுண்டர் தேடல் குறித்து காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.
சிறந்த பேட்ஸ்மேன்கள்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என பல தரமான பேட்ஸ்மேன்கள் இருந்து கொண்டே இருந்தார்கள். கடினமான சமயங்களில் கூட எதிரணியை பந்தாடி ரன்களை குவித்து இந்தியாவுக்காக பல சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
சிறந்த பவுலர்கள்
அதேபோல் ஜவகர் ஸ்ரீநாத், ஜாஹீர் கான், பும்ரா என பல தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து கொண்டே உள்ளனர். சுழல்பந்துவீச்சிலும் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் என பல உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இந்திய அணியிக்கு கிடைத்தனர்.
ஆல்ரவுண்டர்களுக்கு பஞ்சம்
ஆனால் அன்று முதல் இன்று வரை ஆல்ரவுண்டர்களுக்கு தான் பஞ்சம் இருந்து வருகிறது. கபில்தேவ், யுவராஜ் சிங் என ஆல்ரவுண்டர்களை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மட்டுமே இருந்துள்ளனர். குறிப்பாக உலகக்கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு பின் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இன்று வரை கிடைக்கவில்லை. இர்பான் பதான் தொடங்கி தற்போது ஹர்டிக் பாண்டியா வரை ஆல்ரவுண்டர்களை உருவாக்க இந்தியா எத்தனையோ முயற்சிகளை எடுத்தது. ஆனால் இப்போது வரை அதில் முழுமையான வெற்றியை பெறமுடியவில்லை.
கௌதம் கம்பீர் கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், ‘உங்களிடம் ஒன்று இல்லை என்றால் அதை தேடிப் போகக்கூடாது. அது இல்லை என ஒப்புக்கொண்டு அதிலிருந்து நகர முயற்சிக்க வேண்டும். உங்களால் உருவாக்க முடியாததை உருவாக்கலாம் என முயற்சிக்க கூடாது. அதில்தான் பிரச்சனை உள்ளது.
ஆல்ரவுண்டர் தேடல்
சர்வதேச கிரிக்கெட் என்பது வீரரின் செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கான ஒரு இடமே தவிர ஒருவரை வளர்ப்பதற்கான இடமில்லை. உள்ளூர் மற்றும் லிஸ்ட் ஏ கிரிகெட்தான் ஒருவரை வளர்ப்பதற்கு சரியான இடம். உங்களுக்கு உங்களின் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நேரடியாக அங்கு சென்று நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்’ என கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
கபில்தேவ் இடத்தை யாரும் நிரப்பவில்லை
தொடர்ந்து பேசிய அவர், ‘உண்மையை சொல்ல வேண்டுமானால் கபில் தேவுக்கு பின் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் கிடைக்கவில்லை. அதனால் அதிலிருந்து நகர்ந்து ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் திறமையானவரை கண்டறிய வேண்டும். பின்னர் அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு சில போட்டிகளில் வாய்ப்பு கொடுத்துவிட்டு உடனே மாற்ற கூடாது’ என கௌதம் கம்பீர் கூறியுள்ளார். கபில் தேவுக்கு பின் அவரின் இடத்தில் கடந்த 25 ஆண்டுகளில் பல இளம் வீரர்களை இந்தியா சோதித்து பார்த்து விட்டது. ஆனால் தற்போது வரை அந்த முயற்சிக்கான முழு வெற்றி கிடைக்கவில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.
கோலி போன வருச ஐபிஎல் அப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டாரு.. போட்டுடைத்த பாண்டிங்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கேப்டன் பதவி'ல இருந்து மாறுனா மட்டும் போதாது.. கோலி அந்த 'ஈகோ'வ விட்டே ஆகணும்.. பறந்த முக்கிய அட்வைஸ்
- "கோலி ஒரு ரோல் மாடலா என்னைக்கும் இருக்க முடியாது.. கேப்டன் இப்டி பண்றது.." விளாசிய கம்பீர்
- அவரு ரொம்ப 'Dangerous' பவுலர் ஆச்சே! பேட்டிங் வரவங்களுக்கு கண்ணு கலங்கிரும்... இந்திய வீரரை வியந்து பார்க்கும் கம்பீர்
- 'சீக்கிரமா கத்துக்கிட்டா அவருக்கு நல்லது'- கே.எல்.ராகுல் கேப்டன்ஸி எப்படி இருந்தது?- ஜாம்பவான்களின் ஸ்கோர்!
- கபில் தேவ் பகிர்ந்த சீக்ரெட்.. 1983 'WC' ஜெயிச்ச ராத்திரி எதுவும் சாப்பிடாம படுத்தோம்.. பின்னால் இருக்கும் 'சுவாரஸ்யம்'..
- ஹர்திக் பாண்டியா முன்ன மாதிரி இல்லங்க...! தயவு செஞ்சு இனிமேல் 'என்னோட' அவர கம்பேர் பண்ணாதீங்க...! - முன்னாள் வீரர் காட்டம்...!
- 'இவங்கள' மட்டும் 'டீம்'ல வச்சுகோங்க...! 'சிஎஸ்கே அணியில் யாரெல்லாம் continue பண்ணலாம் என...' - ரொம்ப 'ஓப்பனா' சொன்ன முன்னாள் வீரர்...!
- என்ன பொசுக்குன்னு 'இப்படி' சொல்லிட்டீங்க...! 'ஹாக்கியில் இந்திய அணி பதக்கம் வென்றது குறித்து கம்பீர் போட்ட ட்வீட்...' - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்...!
- இங்கிலாந்தில் 'கோலி'க்கு இருக்கும் 'சிக்கல்'.. "மாத்திக்காம இருந்தா அவருக்குத் தான் 'பிரச்சனையே'.." 'ஐடியா' கொடுத்த 'முன்னாள்' வீரர்!!
- "எப்பா சாமி, இப்படி ஒரு மோசமான 'கேப்டன்சி'ய என் வாழ்க்கை'ல பாத்ததே இல்ல.." கடுப்பாகி கொந்தளித்த 'கம்பீர்'..!!