‘முடிவுக்கு வந்த பல வருச காத்திருப்பு’!.. 2 வருசத்துக்கு முன்னாடியே ‘Selector’ சொன்ன ஒரு பதில்.. வைரலாகும் பழைய ‘பேஸ்புக்’ கமெண்ட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசூர்யகுமார் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர் 2 வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் செய்த கமெண்ட் தற்போது வைரலாகி வருகிறது.
மும்பையை சேர்ந்த 30 வயதான கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இந்திய அணியில் முதல்முறையாக தேர்வாகியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்ஸில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 480 ரன்களை குவித்திருந்தார். ஆனாலும் அப்போது நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அவர் தேர்வாகவில்லை. அது அப்போது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
அப்போது இதுதொடர்பாக தெரிவித்திருந்த சூர்யகுமார் யாதவ், ‘ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்படுவேன் என நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. ஐபிஎல் மட்டுமல்லாமல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் நான் நன்றாக ரன் ஸ்கோர் செய்திருந்ததால் எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன். ஆனால் அணியில் தேர்வாகாதது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது’ என தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்த வீடியோவை பதிவிட்டு, ‘இந்த பெயரை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். நீண்ட நேரம் நீங்கள் இந்திய தொப்பியை அணிய வேண்டும். உங்களை புறக்கணித்தற்காக தேர்வாளர்கள் பெரும் அழுத்தத்தில் இருப்பார்கள். கதவு உடையும்’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு ‘SKY (Suryakumar Yadav) சூர்யகுமார் யாதவின் நேரம் வரும்’ என இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வாளருமான (The national selector of the Indian Cricket Team) அபே குருவில்லா கமெண்ட் செய்திருந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன் அவர் சொன்னதுபோலவே தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் கமெண்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதேபோல் இந்திய அணியில் இடம்பித்த சூர்யகுமார் யாதவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், இர்பான் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மிட்நைட்ல கூப்பிட்டு சொன்னாரு...' '15 கோடியா-ன்னு எந்திரிச்சு உட்கார்ந்தேன்...' 'அதுக்கு எத்தனை டாலர்னே எனக்கு தெரியாது...' - உற்சாகத்தில் ஜேமிஸன்...!
- 'நான் அர்ஜுனோட பவுலிங்கை பார்த்துருக்கேன்...' 'சச்சின் மகன் அப்படிங்கறதால செலக்ட் பண்ணல...' - மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் கருத்து...!
- ‘நாட்டுக்காக விளையாடுனது பெருமையா இருக்கு’!.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு.. சிஎஸ்கே வீரரின் உருக்கமான பதிவு..!
- ‘மொயின் அலி வந்து என்கிட்ட கேட்டார்’!.. சேப்பாக்கத்தில் ரசிகர்கள் கேட்ட ‘வலிமை அப்டேட்’.. அஸ்வின் பகிர்ந்த சீக்ரெட்..!
- VIDEO: இது எப்படி ‘நாட் அவுட்’ ஆகும்?.. கோபமாக அம்பயரிடம் போன கோலி.. சர்ச்சையை கிளப்பிய ‘Umpire's Call’!
- ‘சென்னை ரசிகர்கள் புத்திசாலிகள்’!.. புகழ்ந்து தள்ளிய கோலி.. அவர் இப்படி சொன்னதுக்கு ‘காரணம்’ இதுதான்..!
- ‘இத்தனை வருசம் எனக்கு ஆதரவு கொடுத்த எல்லோருக்கும் நன்றி’!.. கண்கலங்க ஓய்வை அறிவித்த இந்திய விக்கெட் கீப்பர்..!
- ‘இதுவரை ஒரு தடவை கூட கப் ஜெயிக்கல’!.. பெயரை மாற்றப் போகும் ஐபிஎல் அணி..!
- ‘சதமடித்து அசத்திய அஸ்வின்’!.. இதை அவரை விடவும் அதிகமாக ‘செலிப்ரேட்’ பண்ணது இவர்தான்.. அதிர்ந்த சேப்பாக்கம்..!
- VIDEO: கடைசியில ‘அஸ்வின்’ கிட்டையும் அதை கேட்டாச்சா.. சேப்பாக்கத்தில் ரசிகர் கேட்ட கேள்வி.. ‘செம’ வைரல்..!