நம்பி ஏமாந்து போன 'பிரபல' வீரர்... இனி இந்திய 'டீமில்' இடம் கெடைக்குறது... ரொம்பவே கஷ்டம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய வீரர்கள் காயமடைந்தால் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் சிகிச்சை எடுக்க வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். சமீபத்தில் வெளிநாட்டில் சிகிச்சை எடுத்த பும்ராவுக்கு தகுதிச்சான்றிதழ் அளிக்க முடியாது என தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறுகின்றனர். கடந்த 2 வருடங்களில் காயம் காரணமாக பல்வேறு முக்கிய போட்டிகளை புவனேஸ்வர் குமார் இழந்தார். எனினும் நம்பிக்கை தளராமல் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்தார்.
இதையடுத்து சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் அவர் இடம் பிடித்தார். அவருக்கு பலமுறை ஸ்கேன்கள் எடுத்து பார்த்து தான் தேசிய கிரிக்கெட் அகாடமி அவரை டீமிற்கு அனுப்பி வைத்தது.
ஆனால் வயிற்றுவலி பிரச்சினையால் 3-வது போட்டிக்கு முன்னரே அந்த தொடரிலிருந்து புவனேஸ் வெளியேறினார். தொடர்ந்து அவரை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு குடலிறக்க பிரச்சினை இருப்பது தெரியவந்தது.
புவனேஸ்வரின் இந்த பிரச்சினை இந்திய டீமில் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பலமுறை ஸ்கேன் எடுத்து பார்த்தும் அவருக்கு குடலிறக்க பிரச்சினை இருந்ததை தேசிய கிரிக்கெட் அகாடமி கண்டறியவில்லை. இதனால் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி இருவரும் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.
இதுகுறித்து இந்திய அணி நிர்வாகம் பிசிசியிடம் புகார் அளித்துள்ளதாம். அதில் புவனேஸ்வரின் இந்த பிரச்சினைக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி தான் முக்கிய காரணம் என்று தெரிவித்து இருக்கிறார்களாம். இந்த பிரச்சினையால் புவனேஸ்வர் தற்போது மிகுந்த வேதனையில் இருக்கிறார். ஏனெனில் இந்த பிரச்சினை சரியாகி அவர் டீமில் இடம்பிடிக்க பல மாதங்கள் ஆகலாம். இந்த இடைவெளியில் வேறு யாராவது புவனேஸ்வரின் இடத்தை பிடித்து விட்டால், அது அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கூட கொண்டு வரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து புவனேஸ்வர் அளித்த பேட்டியில் ,'' இந்த பாதிப்பில் இருந்து நான் எப்போது குணமடைந்து உடல்தகுதியை எட்டி மீண்டும் கிரிக்கெட் களம் திரும்புவேன் என்பது தெரியவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமி முடிந்த அளவுக்கு சிறந்தவற்றையே செய்கிறது. ஆனால் எங்கு தவறு நடந்தது, ஏன் இந்த பாதிப்பை முன்கூட்டியே கண்டறியவில்லை என்பது தெரியவில்லை. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியிடம் பேச வேண்டும்,'' என நொந்துபோய் தெரிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை தற்போது ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணிக்காக புவனேஸ்வர் ஆடிவருகிறார். இந்த பிரச்சினையால் ஐபிஎல்லிலும் புவனேஸ்வர் குமார் பங்குபெற மாட்டார் என்றே கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவரே' போட்டுருந்தா கூட ... 'இப்டி' பண்ணிருக்க மாட்டாரு... முன்னாள் சிஎஸ்கே வீரரை 'பங்கமாக' கலாய்க்கும் ரசிகர்கள்!
- ‘10 ஆண்டுகளில்’ சிறந்த டி20 அணி... விஸ்டனின் பட்டியலில்... ‘மிஸ்’ ஆன 2 ‘முக்கிய’ வீரர்கள்!...
- Video: அவுட் என 'கைதூக்கி'... அம்பயர் 'செய்த' வேலை... அதிர்ச்சியடைந்த வீரர்... விழுந்து, விழுந்து 'சிரித்த' ரசிகர்கள்!
- VIDEO: ‘கிரிக்கெட் சங்க கூட்டத்தில் கைகலப்பு’!.. ‘வாழ்நாள் தடை விதிக்கணும்’!.. கொதித்த கம்பீர்..! பரபரப்பு வீடியோ..!
- VIDEO: ‘சீனியர் ப்ளேயர் கூட சண்டை போட்ட ஸ்டோக்ஸ்’!.. டெஸ்ட் போட்டியில் பரபரப்பு...!
- 'உங்க' இஷ்டத்துக்கெல்லாம் பண்ண முடியாது... டிராவிட்-பும்ரா 'விவகாரத்தில்'... கங்குலி வைத்த 'செக்'
- 'நான் 'இந்து' என்பதால் என்ன ஒதுக்கி வச்சாங்க'...'அவங்க பெயரை சொல்ல போறேன்'...குமுறிய வீரர்!
- ‘12 பேர்’ மட்டுமே பார்த்த போட்டியில்... 4 ‘உலக’ சாதனைகள்... இப்படியும் ஒரு சர்வதேச ‘டி20’ போட்டி!...
- 23 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை... முடிவுக்கு வந்தது... ஓய்வை அறிவித்த முன்னாள் 'சிஎஸ்கே' வீரர்!
- அதெல்லாம் முடியாது... மன்னிப்பு கேட்க 'அடம்பிடித்த' மூத்த வீரர்... அணியில் இருந்து 'அதிரடி' நீக்கம்!