'BP'ஐ எகிற வைத்த 'மேட்ச்'... கடைசி ஓவரில் மல்லுக் கட்டிய 'நட்டூ' Vs 'சுட்டிக்' குழந்தை... இறுதியில் காத்திருந்த 'ட்விஸ்ட்'!!... "ஒரு நிமிஷம் உசுரே போயிடுச்சுயா உங்களால"!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வந்த நிலையில், இன்றைய போட்டிக்கு முன்னர், தொடர் 1 - 1 என சமநிலையில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி ஆடிய இந்திய அணி, 49 ஆவது ஓவரில், 329 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (Rishabh Pant) 78 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சற்று கடின இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடிய நிலையில், அந்த அணிக்கு சிறிய இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. இதனால், இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், சாம் குர்ரான் (Sam Curran) தனியாக நின்று இங்கிலாந்தின் வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்தார்.

எட்டு விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்த போதும், எந்தவித பதட்டமும் இல்லாமல், சாம் குர்ரான் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். இதனால், இறுதியில் சில ஓவர்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனையடுத்து, இறுதி ஓவரில், கைவசம் 2 விக்கெட்டுகள் இருக்க, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

த்ரில்லிங்கான இறுதி ஓவரை தமிழக வீரர் நடராஜன் (Natarajan) வீச வந்தார். இதன் முதல் பந்தில், மார்க் வுட் ரன் அவுட் ஆக, 5 பந்துகளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அதன் பின்னர், சிறப்பாக பந்து வீசிய நடராஜன், மொத்தமாக கடைசி ஓவரில், 6 ரன்கள் மட்டுமே கொடுக்க, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

எங்கயோ சென்று கொண்டிருந்த போட்டியை, தனி ஒருவனாக மாற்றியும், தனது அணியை வெற்றி பெறச் செய்ய முடியவில்லையே என எண்ணி, மைதானத்திலேயே வருந்தினார் சாம் குர்ரான். இந்திய அணிக்கு அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் அதே வேளையில், இறுதி ஓவரை கச்சிதமாக வீசிய நடராஜனுக்கும் ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்