'தடை, அதை உடை'... 'புதிய சரித்திரத்தை எழுதிய இந்திய ஹாக்கி அணி'... 41 வருஷ தவத்திற்கு கிடைத்த பரிசு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோவில் நடைபெற்ற இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையிலான வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கம் வென்று அசதியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் 2-ஆவது நிமிடத்திலேயே ஜெர்மனி அணி கோல் அடித்து முன்னணி வகித்தது. முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து. ஆனால் இந்தியாவால் முதல் கோலை பதிவு செய்ய முடியவில்லை.
இரண்டாம் கால் ஆட்டத்தில் தனி ஒருவனாகப் பந்தை விரட்டிச் சென்ற இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார். ஆனால் அதன் பின்பு ஜெர்மனி 2 கோல்களை அடுத்தடுத்து விளாசி அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் மனம் தளராத இந்திய வீரர்கள் அடுத்துக் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை கோலாக்கினார். பின்பு இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்கான 3-ஆவது கோலை பதிவு செய்தார்.
இதனையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 3, ஜெர்மனி 3 கோல்கள் என சமநிலையிலிருந்தன. முதல் பாதி முடிவடைந்ததும் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். இதில் ருபிந்தர் சிங் பால் அற்புதமான கோலை பதிவு செய்தார். இதனையடுத்து ஜெர்மனி வீரர் செய்த தவறால் இந்தியாவுக்கு பெனால்ட்டி ஸ்டோக் வாய்ப்பு கிடைத்து. இதனை சிம்ரன்ஜீத் கவுர் எதிர்கொண்டு 5-ஆவது கோல் அடித்தார்.
ஆட்டம் முடிய வெறும் 6 விநாடிகள் இருந்த நிலையில் ஜெர்மனிக்கு ஒரு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் அந்த வாய்ப்பை கச்சிதமாக முறியடித்தனர். இறுதி நேர முடிவில் 5-4 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்று ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியா பதக்கத்தை வசப்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நூறுகோடி இந்தியர்களின் சார்பாக சொல்றேன்".. இந்திய மகளிர் ஹாக்கி அணியின்.... ரியல் கோச்சிடம் கோரிக்கை வைத்த 'சக் தே இந்தியா' கபிர் கான்!
- ஒலிம்பிக் ஹாக்கியில்... இந்திய மகளிர் அணியின் வரலாற்று சாதனை!.. 'சக் தே இந்தியா'!.. யார் இந்த ரியல் லைஃப் ஷாரூக் கான்?
- ஒலிம்பிக்கில் ‘வரலாறு’ படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி.. சர்ப்ரைஸாக வந்த ஸ்டார் ‘கிரிக்கெட்’ ப்ளேயரின் வாழ்த்து.. ‘இத நாங்க எதிர்பார்க்கவே இல்ல’!
- "கனவை நெருங்கி விட்டோம்"!.. 'ஆனா அது நிறைவேறுமா'?.. டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாதாரண சூழல்!.. இந்திய ஹாக்கி அணி எமோஷனல் கடிதம்!
- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 38 பேர் கொரோனாவால் பலி || 6 லட்சத்தை கடந்த வைரஸ் பரவல் - அதிர்ச்சியில் உறைந்துள்ள நாடு || இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!
- 'கை, கால கட்டிப்போட்டு... 3 மணி நேரம் காட்டுத்தனமா'... 'உலக அரங்கில்'... 'இந்தியா'வுக்கு பெருமை சேர்த்த 'பெண்மணி'... 'கண்ணீர்' மல்க கதறிய கொடூரம்!
- ‘மரத்தில் மோதி நொறுங்கிய கார்’.. போட்டியில் விளையாட போன 4 ஹாக்கி வீரர்கள் உடல் நசுங்கி பலி..!
- 'அப்பாவ பெருமப்பட வைக்கணும்'.. மகிழ்ச்சிக்கு நடுவே நேர்ந்த சோகம்.. நெகிழவைத்த வீராங்கனை!