‘எந்த பக்கம் அடிச்சாலும் ‘தல’ கிட்ட தப்ப முடியாது’.. ‘அடுத்தடுத்து 3 கேட்ச்’.. மிரண்டு போன ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை லீக் சுற்றின் 44 -வது போட்டி நேற்று(06.07.2019) ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகள் மோதின. இந்திய அணியை பொறுத்தவரை இரண்டு முக்கிய மாற்றங்களை செய்தது. அதில் காயம் ஏற்படும் வீரர்களுக்கு பதிலாக அவ்வப்போது விளையாடி வந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார். அதனால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெளியே அமர்த்தப்பட்டார். மேலும் சுழற்பந்து வீச்சாளர் சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற்றார்.
இந்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மேத்யூஸ் சதமும்(113), திரிமன்னே அரைசதமும்(53) அடித்தனர். இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, புவனேஷ்வர்குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதில் இந்திய அணி எடுத்த முதல் மூன்று விக்கெட்டுகளும் தோனி கேட்ச் பிடித்து அவுட் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 265 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா(103) மற்றும் கே.எல்.ராகுல்(111) ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இந்நிலையில் ஜூலை 9 -ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'யாருயா அவரு?' .. '606 ரன்கள்.. 11 விக்கெட்ஸ்' .. உலகக்கோப்பை 2019-ன் அதிவேகப் புயலாக மாறிய அதிரடி வீரர்!
- 'மொத்த கனவும் நொறுங்கியது'... 300க்கும் மேல ரன் எடுத்தாலும்.. பாகிஸ்தானின் பரிதாப நிலை!
- ‘இதுவரை யாரும் நெருங்காத சச்சினின் 27 ஆண்டுகால சாதனை’.. ஒரே போட்டியில் முறியடித்த இளம் விக்கெட் கீப்பர்!
- 'தென் ஆப்ரிக்க வீரர் நாளையுடன் ஓய்வு'... 'ரசிகர்கள் கவலை!'
- ‘கட்டை விரலில் காயம்’.. அடுத்த போட்டியில ‘தல’ விளையாடுவாரா? வெளியான புதிய அப்டேட்!
- ‘அது மொத்த கிரிக்கெட் உலகத்துக்குமே சோகமான நாள்’.. ‘10 ரன்னில் மிஸ் ஆன சாதனை’.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!
- 'தல தோனிக்கு ஓய்வு தேவையா?'... 'விமர்சனத்திற்கு பதிலடி தந்த வீரர்'!
- 'அரையிறுதிக்கு முன்னாடியா இப்டி நடக்கணும்?’... ‘காயம் காரணமாக ஆஸ்திரேலியா வீரர் விலகல்'!
- ‘தல’தோனி ஏன் 3 பேட்டை மாத்தி விளையாடுறாரு தெரியுமா?.. இதுவரை வெளிவராத ரகசியம்..!
- 'இவர் எங்களுக்கு உதவி பண்ணுவாரு'... 'நாங்க 500 ரன் அடிப்போம்'... 'மிராக்கிள்' நடக்குமா மக்களே !