மூன்றே நாட்களில் முடிந்த 'டெஸ்ட்' ... 'எட்டு' வருடங்களுக்குப் பிறகு ... 'நம்பர் 1' அணியின் மோசமான 'நிலை' !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வந்த கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 கைப்பற்றியுள்ளது.

நியூசிலாந்து மண்ணில் நடந்து வரும் டி 20 தொடரை இந்திய அணியும், ஒரு நாள் போட்டி தொடரை நியூசிலாந்து அணியும் கைப்பற்றியிருந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 97 ரன்கள் முன்னிலையுடன் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

132 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை எட்டி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 120 புள்ளிகளையும் பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக கைல் ஜெமிசனும், தொடர் நாயகனாக டிம் சவுதியும் அறிவிக்கப்பட்டனர். இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இந்திய அணி இழந்த நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

KANE WILLIAMSON, VIRAT KOHLI, TIM SOUTHEE, IND VS NZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்