'அவர் அவுட் ஆஃப் பார்மில் இருக்காரு, ஆனா வாய்ப்பு கிடைக்குமா?'... 'ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் இவரா?'... இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று ஆரம்பிக்கிறது.

இந்திய அணியின் ஆரம்பமே அமர்க்களம் என்று சொல்லும் அளவிற்கு டெஸ்ட் தொடர் வெற்றி, டி20 தொடர் வெற்றி என இந்திய அணி பெரும் உற்சாகத்துடன் களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி மீது ரசிகர்களுக்குப் பல எதிர்பார்ப்புகள் கொட்டி கிடக்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து ஆடப்போவது யார் என்பதில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

அந்த வாய்ப்பு அனேகமாக ஷிகர் தவானுக்கு தான் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் கோலியைப் பொறுத்தவரை டி20 போட்டியில் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இன்றைய போட்டியில் அவர் நிச்சயம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு ஒரு நாள் போட்டியில் விராட்கோலி சதம் எதுவும் அடிக்கவில்லை.

இந்தியாவின் பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரை,  ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். இதற்கிடையே ரசிகர்கள் பலரும் கேட்ட கேள்வி, அவுட் ஆஃப் பார்மில் இருக்கும் கேஎல் ராகுலுக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது தான். அதற்கு பாசிட்டிவான பதிலை தான் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர், நடராஜன் சுழற்பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், குருணல் பாண்ட்யா உள்ளிட்ட சிறந்த வீரர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஒருநாள் போட்டியில் உலக சாம்பியன் என்ற தோரணையோடு களமிறங்க உள்ளது.

ஆனால்  இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் பேட்டிங் சொல்லி கொள்ளும் அளவில் இல்லை. இது ஒரு மைனஸாக பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து அணி பேட்டிங்கை பொறுத்தவரை, அந்த அணியின் ஜாஸ் பட்லர், ராய், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆகியோரை தான் பெரிதும் நம்பி இருக்கிறது. வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை மார்க்வுட் நன்றாக விளையாடி வருகிறார்.

ஆனால் காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் தொடரிலிருந்து விலகியிருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ரசிகர்களுக்கு இந்த போட்டியில் அனுமதி இல்லை. இந்தப் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு புனே நகரின் மராட்டிய கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்குகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்