‘பவுண்டரிக்கு பதிலா இததான் பாத்திருக்கணும்’.. உலகக்கோப்பை சர்ச்சைக்கு கருத்து சொன்ன இந்திய பிரபலம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பவுண்டரிகள் அடிப்படையில் முடிவுகள் அறிவித்தது குறித்து இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றியது. இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இரு அணிகளும் மோதிய இறுதிப்போட்டி முதலில் டிரா ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
ஆனால் சூப்பர் ஓவரிலும் போட்டி டிரா ஆனதால், அதிக பவுண்டரிகள் அடித்த அணி வெற்றி பெற்ற அணியாக ஐசிசி அறிவித்தது. இது அப்போது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதில் இரண்டாவது சூப்பர் ஓவர் முறை கடைபிடித்திருக்கலாம் என கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பவுண்டரி முறை குறித்து இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளர் பரத் ஸ்ரீதர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘50 ஓவர்கள் போட்டியில் எந்த அணி குறைவான விக்கெட்டை இழந்துள்ளதோ அந்த அணியே வெற்றி பெற்றதாக இருக்க முடியும். ஏனென்றால் ரன்களை குவிப்பதைப் போல் விக்கெட் விழாமல் காத்துக்கொள்வதும் முக்கியமான ஒன்று. அதனால் அந்த அணியே வெற்றிக்கு தகுதியானதாக இருக்கும். பவுண்டரிகள் குறைவாகவோ, அதிகமாகவோ அடித்திருந்தாலும் இரு அணிகளும் ஒரே ரன்களே எடுத்திருந்தன. ஆகையால் பவுண்டரி முறையை ஐசிசி மறுபரீசிலனை செய்ய வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
'அந்த வெறி'.. 'அந்த நிதானம்'.. 'இதெல்லாம் கத்துக்கணுங்க'.. விண்டீஸ்க்கு எதிரான அணியில் இணைந்த வீரர்!
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுக்கு டஃப் கொடுக்க மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்டார் ப்ளேயர்கள்..! வெளியான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பட்டியல்..!
- ‘சீனியர்களை நம்பியதே தோல்விக்குக் காரணம்..’ உலகக் கோப்பைக்குப் பிறகு மனம் திறந்துள்ள கேப்டன்..
- ‘போட்டிக்கு 200 ரூபாயில் இருந்து இந்திய அணி வரை..’ பிரபல ஐபிஎல் பௌலரின் அசத்தல் பயணம்..
- ‘நோ பால்’ மூலம் ஏற்படும் விக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி..! புதிய விதியை கொண்டுவரும் ஐசிசி..!
- ராணுவம் செல்லும் தோனியை கிண்டலடித்த பிரபல முன்னாள் வீரர்..! கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!
- கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு..? பதிலளித்த தேர்வுக்குழு தலைவர்..!
- 'களத்தில் குதிக்கும் 'தல'... 'ஆனா இதுமட்டும் பண்ண வேண்டாம் 'தோனி'... ராணுவத்தின் புதிய அறிவிப்பு!
- 'பைனல்'ல இது தான் நடந்துச்சு'... 'ஆனா அதுக்காக 'துக்கப்படல, துயரப்படல'... சஸ்பென்ஸ் உடைத்த நடுவர்!
- 'ஓரவஞ்சனயெல்லாம் இல்ல'.. 'அம்பதி ராயுடுவின் 3D கண்ணாடி ட்வீட்'.. மனம் திறந்த கிரிக்கெட் பிரபலம்!
- ‘வெஸ்ட் இண்டீஸ் தொடர்’... ‘இந்திய அணி அறிவிப்பு!’