'காயம்னு சொன்னீங்க!.. அப்புறம் எப்படி மேட்ச்சுக்கு வந்தாரு'?.. உண்மையை மறைக்கிறதா பிசிசிஐ?.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!.. பெரும் சர்ச்சையில் சிக்கிய கங்குலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரோஹித் சர்மா காயம் அடைந்து இருப்பதால் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ கூறி வருகிறது. ஆனால், அவர்களுக்கு கடும் அதிர்ச்சி அளித்தார் ரோஹித் சர்மா.

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் அவர் பங்கேற்றார். காயம் காரணமாக அவரால் ஓடக் கூட முடியாது என கூறி வந்த பிசிசிஐக்கு சம்மட்டி அடி கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.  

2020 ஐபிஎல் தொடரின் இடையே ரோஹித் சர்மா காயம் அடைந்தார். அதன் பின் சில போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு காலில் தசைப்பிடிப்பு காரணமாக கடுமையான வலி இருப்பதாக கூறப்பட்டது.

பிளே-ஆஃப் சுற்றுக்கு முன் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அவர் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி என மூன்று அணிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரிகள், அவரது காயம் மோசமாக இருப்பதாக கூறினார்கள். ஆனால், ரோஹித் சர்மா தொடர்ந்து மும்பை அணியில் வலைப் பயிற்சி செய்து வந்தார். இதனால், பெரும் குழப்பம் நிலவி வந்தது. ரோஹித் சர்மாவுக்கு எதிராக பிசிசிஐ செயல்படுவதாக கூறப்பட்டது.

பிசிசிஐ தலைவர் கங்குலி நீண்ட இடைவெளிக்குப் பின் இது பற்றி விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தில் ரோஹித் சர்மாவுக்கு காயம் உள்ளது. அது குணமான பின்னரே இந்திய அணியில் சேர்க்கப்படுவார் எனக் கூறினார்.

அவர் கூறியதை வைத்துப் பார்த்தால் அவரால் ஐபிஎல் தொடரில் ஆடவே முடியாது என்பது போலத் தான் இருந்தது. ஆனால், கங்குலி விளக்கம் அளித்த சில மணி நேரத்தில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போட வந்து நின்றார்.

தான் உடற்தகுதியோடு இருப்பதாக அவர் கூறினார். போட்டியில் சிங்கிள் ரன் ஓடும் போதும் அவரிடம் எந்த சிரமமும் இல்லை. 

ரோஹித் காயம் பற்றி கங்குலி கூறியது ஒன்றாகவும், உண்மை நிலை வேறாகவும் இருந்ததால் கடும் சர்ச்சை வெடித்தது. பிசிசிஐ-யில் கங்குலிக்கே தெரியாமல் நிறைய விஷயங்கள் நடப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பிசிசிஐ தேர்வுக் குழு மற்றும் மருத்துவக் குழு மீதும் விமர்சனம் எழுந்துள்ளது. 

உண்மையில் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பிசிசிஐ கூறுவது போல பல மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் எல்லாம் அவர் இல்லை. இதைத் தான் மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் அவர் போட்டியில் பங்கேற்று நிரூபித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்