'தம்பி... 'அந்த' தப்ப மட்டும் பண்ணிடாத பா!'.. 'எல்லாரும் கோலி ஆகிட முடியாது'!.. சீனியர் வீரருக்கு அடிச்ச 'யோகம்' குறித்து... ஹர்பஜன் பரபரப்பு கருத்து!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அஜின்க்யா ரஹானே, விராட் கோலியை காப்பி அடிக்கக் கூடாது என ஹர்பஜன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் மூத்த வீரரும், துணை கேப்டனுமான அஜின்க்யா ரஹானே திடீரென முக்கியத்துவம் பெற்றுள்ளார்.

அதற்கு காரணம் விராட் கோலி விடுப்பு எடுத்துக் கொள்ள இருப்பதுதான்.

கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் முழுமையாக பங்கேற்பார். அதன் பின் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் இந்தியா கிளம்ப உள்ளார். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், குழந்தைப்பேறின் போது அருகே இருக்க அவர் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். 

இந்த நிலையில், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே கேப்டனாக செயல்பட இருக்கிறார். இது தன்னை நிரூபிக்க அவருக்கு பெரிய வாய்ப்பு என பொதுவான கருத்து இருந்தாலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தத் தொடர் அத்தனை எளிதானது இல்லை. 

கேப்டனாக விராட் கோலி களத்தில் மொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் ஈடுகொடுப்பார். அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். ஆனால், ரஹானே அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர். களத்தில் என்ன நடந்தாலும் அமைதி காப்பார். 

ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் வரவுக்கு பின் வலுவாக மாறி உள்ளது. மார்னஸ் லாபுஷாக்னே போன்ற நல்ல பேட்ஸ்மேன்களும் உள்ளனர். இவர்கள் மூவரும் கடந்த முறை டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை.

இந்த நிலையில், "ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக ரஹானேவால் வீழ்த்த முடியுமா?  அமைதியான அஜின்க்யா ரஹானேவும், கோலி போல ஆக்ரோஷமாக மாறி ஆஸ்திரேலிய அணிக்கு ஈடு கொடுத்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தலாம்.

ஆனால், அது தவறாக செல்ல வாய்ப்பு உள்ளதாக சுழற் பந்துவீச்சாளர் வீரர் ஹர்பஜன் சிங் கூறி உள்ளார். ரஹானே மிகவும் அமைதியானவர். வெளிப்படையாக தன்னை வெளிக் காட்டிக் கொள்ளமாட்டார். அவர் விராட் கோலியை விட வித்தியாசமானவர்.

ரஹானேவுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் தன் ஆட்டத்தையோ, குணத்தையோ மாற்றிக் கொள்ள அவசியமில்லை என்றார். விராட் கோலியின் குணத்தை பார்த்து, நாமும் அது போல நடந்து கொண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தலாம் என அவர் நினைக்கக் கூடும். ஆனால், அது தேவையற்றது.

ரஹானே செய்ய வேண்டியதெல்லாம் தாமாகவே இருந்து, அணியின் சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வந்தால் போதும் என்றார் ஹர்பஜன் சிங். 

மேலும், விராட் கோலியை ஒரு வீரராகவும், கேப்டனாகவும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா இழக்கும் என கூறினார் ஹர்பஜன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி சிறந்த ரெக்கார்டு வைத்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். கோலி இல்லாத நிலையில் ரஹானேவுக்கு பெரும் சவால்கள் காத்துக் கொண்டுள்ளது. 

ரஹானே களத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை விட அணியை எப்படி சரி சமமாக தேர்வு செய்யப் போகிறார் என்பதே பெரிய கேள்வியாக அமைந்துள்ளது. கோலிக்கு பதில் யார் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்யப் போகிறார்கள்? என்ற கேள்விக்கு அவர் விடை கண்டுபிடிக்க வேண்டும்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்