‘ரன்களே எடுக்காமல்’... ‘அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள்’... ‘ஏமாற்றமடைந்த இந்திய கேப்டன் கோலி’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில், கடைசி 11 ரன்களுக்கு 4 விக்கெட்களை இந்தியா இழந்ததால் கேப்டன் விராட் கோலி கடும் ஏமாற்றம் அடைந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி படு நிதானமாக பேட்டிங் செய்தது. முதல் நாளின் முடிவில் 233 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து இருந்தது.

முதல் நாள் ஆட்டத்தில் கோலி 74, புஜாரா 42, ரஹானே 42 ரன்கள் எடுத்தனர். நாளின் முடிவில் அஸ்வின், சாஹா பேட்டிங் செய்து வந்தனர். அவர்கள் அணியை 250 ரன்களை கடந்து 300 ரன்கள் வரை அழைத்துச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய உடன் மூன்றாவது பந்தில் அஸ்வின் 15 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சாஹா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின் உமேஷ் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.

உமேஷ் யாதவ் சில டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி உள்ளார். அதனால் அவர் சில பவுண்டரிகளை அடிப்பார் என எதிர்பார்த்தது இந்திய அணி நிர்வாகம். ஆனால், அவர் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷமி டக் அவுட் ஆனார். 233 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து இருந்த இந்திய அணி, 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

11 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து ஏமாற்றம் அளித்தது. 250 ரன்களை கடக்கக் கூட உதவாத பின்வரிசை வீரர்களை கண்டு கோலி பெரும் ஏமாற்றம் அடைந்தார். இதற்கிடையில், இதற்கு அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை, அஸ்வின் அபார பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் அந்த அணி 191 ரன்களுக்குள் சுருண்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்