‘பௌலிங்கில் மாஸ் காட்டிய சிஎஸ்கே வீரர்’.. ஹாட்ரிக் வெற்றியை பெற்ற இந்தியா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்று கோப்பை கைப்பற்றியுள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று கயானா நகரில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார். மேலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடிய தீபக் சஹார், மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ராகுல் சஹார் போன்ற இளம் வீரர்களுக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அண்யின் கேப்டன் விராட் கோலி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பாக தீபக் சஹார் 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளையும், ராகுல் சஹார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 19.1 ஓவர்களின் முடிவில் 150 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வொய்ட் வாஷ் செய்து தொடரை வென்றது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 65 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும் எடுத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியா’.. அணியில் சில முக்கிய மாற்றங்கள்..! சூசகமாக சொன்ன கோலி..!
- ‘ரோஹித், ஜடேஜா விளையாடிய புதிய கேம்’.. அப்போ கோலி என்ன பண்ணாரு..? வைரலாகும் வீடியோ..!
- கையில ஓநாய் டாட்டூ போட்டதுக்கு காரணம் என்ன..? ரகசியம் உடைத்த பிரபல இந்திய வீரர்..!
- 'அதுக்குள்ள அடுத்த சதமா?.. விளாசும் வீரர்'.. ஆனால், ‘கோலியவிட பெஸ்ட்டா?’.. சர்ச்சை ட்வீட்!
- 'வா தல.. வா தல'.. கெயிலின் சாதனையை முறியடித்து 'புதிய சாதனை'.. 'அட்சு தூக்கிய இந்திய வீரர்'!
- ‘சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவருக்கு’.. ‘அதப்பத்தி எல்லாம் என்ன தெரியும்..?’ பிசிசிஐ சாடியுள்ள முன்னாள் வீரர்..
- கண்டிப்பா வருவேன்.. ‘ரகசிய ஆசையை உடைத்த பிரபல வீரர்..’ உற்சாகத்தில் ரசிகர்கள்..
- ‘களத்துக்கு வெளிய முரண் இருக்கலாம், ஆனா...’ கோலி, ரோஹித் மோதல் சர்ச்சை..! கருத்து கூறிய முன்னாள் கேப்டன்..!
- ‘அம்மோடியோவ்! இவ்ளோவா?'... 'பிசிசிஐக்கு குவிந்த விண்ணப்பங்கள்'!
- 'இதுல கோலிக்கு மட்டும் இல்ல'... 'எல்லோருக்குமே உரிமை இருக்கு'... கபில் தேவ் அதிரடி!