சிம்பிளா முடிச்சிருக்க வேண்டிய மேட்ச்!.. மணிஷ் பாண்டே செய்த தவறால்... பெரும் தலைவலியில் இந்திய அணி!.. ஏகக்கடுப்பில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சீனியர் வீரர் மணிஷ் பாண்டே செய்த தவறு இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று (20.7.2021) 2வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் சனகா இந்த முறையும் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டி நடைபெறும் ப்ரேமதசா பிட்ச்சில் எவ்வளவு சீக்கிரம் விக்கெட்களை எடுக்கின்றோமோ அந்த அளவிற்கு சாதகமான சூழல் நிலவும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியிருந்தனர். முதல் போட்டியின் போது பவர் ப்ளே ஓவரில் இந்திய வீரர்கள் எடுத்த விக்கெட்டுகள்தான் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. எனவே, 2வது போட்டியிலும் அதே திட்டத்துடன் இந்திய அணி களமிறங்கியது. 

ஆனால், மணிஷ் பாண்டே செய்த சிறிய தவறு மிகப்பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியின் ஓப்பனர்கள் அவிஷிங்கா ஃபெர்னாண்டோ - மினோத் பனுக்கா ஜோடி சிறப்பான அடித்தளத்தை அந்த அணிக்கு அமைத்துக் கொடுத்துள்ளனர். சீரான வேகத்தில் பவுண்டரிகளை அடித்த இவர்கள் முதல் விக்கெட்டிற்கு 77 ரன்களை சேர்த்தனர். மினோத் பனுகா 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

இவர்களின் இந்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் முதல் 2 ஓவர்களிலேயே முறிந்திருக்க வேண்டியது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தை அவிஷிங்கா, டிஃபென்ஸ் ஆட முயன்றார். ஆனால், அவுட் ஸ்விங்காக வந்த பந்து பேட்டில் எட்ஜாகி கேட்ச் வாய்ப்பானது. வேகமாக சென்ற அந்த பந்து 2வது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த மணிஷ் பாண்டே, டைவ் அடித்தும் பிடிக்க முடியாமல் போனது. இந்த கேட்ச் மிகவும் சிரமமான ஒன்று என்பதால் பாண்டே மீது யாரும் குறை கூறவில்லை. 

ஆனால், அதற்கு அடுத்த ஓவரிலேயே பிடிக்க வேண்டிய கேட்சை மிஸ் செய்தார் மணிஷ் பாண்டே. 2வது ஓவரின் கடைசி பந்தை தீபக் சாஹர் வீச பேட்ஸ்மேன் பனுக்கா, டிஃபென்ஸ் ஆடினார். அப்போது பந்து எட்ஜாகி மீண்டும் 2வது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த பாண்டேவிடம் சென்றது.

அப்போது அவர் கவனக்குறைவாக செயல்பட்டதால், பிடிக்க வேண்டிய கேட்சை கோட்டைவிட்டார். அவர் விட்ட கேட்ச்-இன் விளைவாக இலங்கை அணி முதல் விக்கெட்டிற்கு 77 ரன்களை எடுத்து வலுவான நிலைக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக மணிஷ் பாண்டேவை நெட்டிசன்கள் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்