‘குரு’-வின் ரெக்கார்டை அசால்டா பிரேக் பண்ணிய ‘சிஷ்யன்’.. 24 வயதில் ‘மாஸ்’ காட்டிய ரிஷப் பந்த்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 123 ரன்களும், மயங்க் அகர்வால் 60 ரன்களும், ரஹானே 42 ரன்களும் எடுத்தனர். அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளும், ரபாடா 3 விக்கெட்டுகளும் மார்க்கோ ஜான்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் இந்திய அணியை பொறுத்தவரை முகமது சமி 5 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இப்போட்டியில் 4 கேட்சுகளை பிடித்து விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தோனி 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். இதை 25 டெஸ்ட் போட்டியிலேயே 100 விக்கெட்டுகளை வீழ்த்தி ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். 24 வயதில் ரிஷப் பந்த் இந்த சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்