VIDEO: கொஞ்சம் அங்க பாருங்க ‘காலை’ அவரு எங்க வச்சிருக்காருன்னு.. சர்ச்சையான ‘இந்திய’ வீரரின் அவுட்.. கொதிக்கும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஹனுமா விஹாரி அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: கொஞ்சம் அங்க பாருங்க ‘காலை’ அவரு எங்க வச்சிருக்காருன்னு.. சர்ச்சையான ‘இந்திய’ வீரரின் அவுட்.. கொதிக்கும் நெட்டிசன்கள்..!
Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சுரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 117 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

IND vs SA: Hanuma Vihari caught off No-ball by Kagiso Rabada

இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் 50 ரன்களும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 46 ரன்களும் எடுத்தனர்.

IND vs SA: Hanuma Vihari caught off No-ball by Kagiso Rabada

இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிக்கு சோதனை கொடுத்து வந்தது.

அப்போது பந்து வீசிய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்தார். அதனால் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அசத்தியிருந்தார்.

இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஹனுமா விஹாரி அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 39 ஓவரின் 4-வது பந்தை தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா வீசினார். அந்த பந்து ஹனுமா விஹாரியின் கையில் பந்து பட்டு கேட்ச் ஆனது. அதனால் அம்பயர் அவருக்கு அவுட் கொடுத்தார்.

ஆனால் ரபாடா பந்து வீசும்போது காலை கிரீசுக்கு வெளியே வைத்திருந்தது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது. அதனால் இதனை நோ பால் என்றும் அம்பயர் தவறாக அவுட் கொடுத்துவிட்டார் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக விலகியதால், ஹனுமா விஹாரிக்கு அணியில் இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

INDVSA, HANUMAVIHARI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்