‘போட்டிக்கு முதல்நாள் பாகிஸ்தான் வீரர்கள் செய்த காரியம்..’ காட்டமான ரசிகர்களுக்கு ஷோயிப் மாலிக் விளக்கம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்களில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

பாகிஸ்தானின் இந்தத் தோல்விக்குப் பின் அந்த அணி வீரர்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்கள் விளையாடிய விதத்திற்கு முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முதல் நாள் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் ஹோட்டல்களில் உள்ளது போலவும், துரித உணவகங்களில் சாப்பிடுவது போலவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு சாப்பிட்டால் எப்படி விளையாட முடியும்? எனவும், நன்றாகப் பயிற்சி செய்கிறீர்கள் எனவும் ரசிகர்கள் அதற்குக் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக், “அந்தப் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் 13ஆம் தேதி எடுக்கப்பட்டவை. போட்டிக்கு முதல்நாள் 15ஆம் தேதி நாங்கள் எங்கும் செல்லவில்லை. பாகிஸ்தான் ஊடகங்கள் எப்போதுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்படப்போகின்றன” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “வீரர்களின் சார்பில் நான் ஊடகங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். ரசிகர்களும், மக்களும் எங்கள் குடும்பத்தினருக்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் கொடுக்க வேண்டும். மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் நாட்டுக்காக விளையாடுகிறேன். ரசிகர்கள் பேசுவதைக் கேட்பதும், என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி விளக்கம் அளிப்பதும் வேதனையாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

ICCWORLDCUP2019, INDVSPAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்