‘இந்த நாளை என்னைக்கும் மறக்க மாட்டேன்’!.. பாகிஸ்தான் வீரரின் ‘Fan boy’ மொமண்ட்.. தோனிக்கு நேராக நிற்கிற வீரர் யாருன்னு தெரியுதா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி முடிந்த பின் பாகிஸ்தான் வீரர்களுடன் தோனி உரையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 ரன்களும், ரிஷப் பந்த் 39 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 68 ரன்களும், முகமது ரிஸ்வான் 79 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி, இந்தியாவின் 12 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளது.

உலகக்கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது கிடையாது. இதுவரை 12 தடவை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஒவ்வொரு தடவையும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழலில் நேற்றைய போட்டியில் அபார வெற்றி அந்த வரலாற்றை பாகிஸ்தான் மாற்றி எழுதியுள்ளது.

இந்த நிலையில் நேற்று போட்டி முடிவடைந்ததும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், சோயப் மாலிக், இமாத் வாசிம் மற்றும் ஷாநவாஸ் தஹானி ஆகியோருடன், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆலோசகருமான தோனி கலந்துரையாடினார். பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள், ஒருவருக்கொருவர் அதிகமாக பேசிக்கொள்ள மாட்டார்கள் என சொல்லப்படுவது உண்டு.

ஆனால் இதை பொய்யாக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்களுடன் தோனி சகஜமாக பேசினார். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றபின், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வானுக்கு கைக்கொடுத்து பாராட்டினார். இந்த சம்பவங்கள் இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் ஷாநவாஸ் தஹானி, நேற்றைய போட்டிக்கு முந்தைய நாள் பயிற்சி முடிந்து தோனி சென்றுகொண்டிருந்தபோது அவரது ஃபிட்னஸ் குறித்து புகழ்ந்து கூறினார். இதற்கு, ‘எனக்கு வயதாகிவிட்டது, ஃபிட்டாக இல்லை’ என தோனி குறும்பாக பதிலளித்தார். உடனே, ‘இல்லை..இல்லை முன்பை விட இப்போதுதான் அதிக ஃபிட்டாக இருக்கிறீர்கள்’ என ஷாநவாஸ் தஹானி கூறினார். இந்த வீடியோ அப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று போட்டி முடிந்ததும் தோனியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாநவாஸ் தஹானி பதிவிட்டுள்ளார். அதில், ‘பாகிஸ்தான் வெற்றி பெற்ற மகிழ்ச்சி மற்றும் எனது கனவு வீரர்களில் ஒருவரான தோனியை சந்தித்தை என்றும் மறக்க மாட்டேன்’ என ஷாநவாஸ் தஹானி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்