Video: என்ன தான் 'கோபம்' இருந்தாலும் அதுக்காக இப்டியா?... 'கேப்டனின்' செயலால்... ஸ்டன்னாகிப் போன ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், பிரித்வி ஷா துவக்கம் கொடுத்தனர். பிரித்வி ஷா 20 ரன்களிலும், அகர்வால் 32 ரன்களிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. விராட் கோலி 51 ரன்களில் அவுட் ஆக, தொடர்ந்து கே.எல்.ராகுல் ஷ்ரேயாஸுடான் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ஷ்ரேயாஸ்(103) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை குவித்தது. ராகுல் 88*, ஜாதவ் 26* கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் குப்தில், நிக்கோலஸ் நல்ல துவக்கம் கொடுத்தனர். குப்தில் 32 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து உள்ளே வந்த பிளெண்டல் ஸ்டம்ப்ட் அவுட் ஆகி 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். எனினும் அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவரை அவுட் செய்ய இந்திய பவுலர்கள் கடும் முயற்சி செய்தனர்.

இந்த நிலையில் ராஸ் டெய்லர் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு நிக்கோலஸை கூப்பிட அருகில் இருந்த கேப்டன் விராட் கோலி மின்னல் போல பாய்ந்து அவரை ரன் அவுட் செய்தார். இதனால் நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிக்கோலஸ் 78 ரன்களில் தேவையில்லாமல் ஆட்டமிழந்து வெளியேறினார். விராட்டின் இந்த மின்னல் வேக ரன் அவுட்டை ரசிகர்கள் கொண்டாட, வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீல்டிங்கின் போது இந்திய வீரர்கள் சில எளிதான கேட்சுகளை நழுவ விட்டனர். இதைப்பார்த்த நியூசிலாந்து அணி பயமின்றி அடித்து ஆட ஆரம்பித்தது. கோலி லைட்டாக டென்க்ஷன் ஆக ஆரம்பித்தார்.இதனால் ஆக்ரோஷமாக இருந்த கோலி இந்த ரன் அவுட் மூலம் தன்னுடைய கணக்கை தீர்த்துக் கொண்டார். 35 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது ராஸ் டெய்லர் 52* ரன்களுடனும், லாதம் 35* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்