எப்டி போனாரோ அப்டியே 'திரும்பி' வந்திருக்காரு... 'ஓபனிங்' எறங்கப்போறது 'இவங்க' தான்... ரகசியம் 'உடைத்த' கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதில் வென்று டெஸ்ட் தொடரின் நம்பர் 1 அந்தஸ்தை தக்க வைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி இருக்கிறது. இதனால் நாளைய போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் நாளைய போட்டியில் ஓபனிங் இறங்கப்போகும் வீரர்கள் யார் என்பது? குறித்து கேப்டன் கோலி சூசகமாக தெரிவித்து இருக்கிறார். அதில் காயத்தில் இருந்து மீண்டு வந்த இஷாந்த் சர்மா, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய மூவரும் களமிறங்குவார்கள் என்பதை மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர், '' காயத்துக்கு முன் இஷாந்த் சர்மா எப்படி பந்தை வீசினாரோ அதேபோல தற்போது பந்தை வீசுகிறார். பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்யும் அவர் 2 முறை நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி இருப்பதால், அவரது அனுபவம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மயங்க் அகர்வால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் எவ்வளவு நேர்த்தியாக ஆடினாரோ, அதேபோல நேர்மறையான சிந்தனையுடன் இருக்க வேண்டும். பிரித்வி ஷாவுக்கு சர்வதேச அனுபவம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி கூற மாட்டேன். ஏனெனில் கடந்த ஆண்டு அவர் அதிகளவு ரன்களை குவித்து இருக்கிறார். அதேபோல நியூசிலாந்திலும் அவர் எப்படி ஆட வேண்டும் என்பதை உணர்ந்து இருப்பார்,'' என தெரிவித்து இருக்கிறார்.  

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்