உலகின் 'சிறந்த' விக்கெட் கீப்பரா இருந்தாலும்... 'ஓரமா' தான் உட்காரணும்... கோலி போடும் 'புது' கணக்கு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்று நடைபெறும் போட்டியில் விக்கெட் கீப்பராக யாரை கோலி களமிறக்க போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஒருபுறம் அனுபவம் வாய்ந்த விருத்திமான் சஹா இன்னொரு புறம் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இருவரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருக்கின்றனர்.

இதில் யாரை நியூசிலாந்து அணிக்கு எதிராக கோலி விளையாட வைக்கப்போகிறார் என்கிற குழப்பம் கோலிக்கும் இருக்கிறதாம். விக்கெட் கீப்பராக சஹா மிகவும் சிறப்பாக செயல்படக் கூடியவர். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது சஹா உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என கோலி மனமார புகழ்ந்திருந்தார்.

ஆனால் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை பண்ட்டின் சராசரி 44-க்கும் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் சஹாவின் டெஸ்ட் சராசரி 30 என்றளவிலேயே உள்ளது. மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு எதிராக பண்ட் சதமடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்திய பயிற்சி போட்டியில் பண்ட் அதிரடியாக ஆடி 70 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதனால் பண்டிற்கு வாய்ப்பு கொடுக்கலாம் என கோலி தீவிரமாக யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சஹா நல்ல கீப்பர் தான் ஆனால் அதிரடியான பேட்ஸ்மேன் இல்லை அவரை ஒப்பிடும் போது ரிஷப் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கக்கூடியவர். இதனால் சஹாவை விடுத்து கோலி பண்டை தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்