இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் நடைபெறுமா..? திடீரென வந்த ‘புது’ சிக்கல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.

கான்பூர் மைதானத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (03.12.2021) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அதனால் மும்பை டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்டத்தின் முதலான நாளை 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

WEATHER, INDVNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்