'இவரு' இருந்தா... அந்த டி20 மேட்சுல இந்தியா 'தோத்தது' கெடையாதாம்... புள்ளிவிவரத்துடன் 'புட்டுப்புட்டு' வைக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய டி20 போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் என அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். விதிவிலக்காக கே.எல்.ராகுல் மட்டும் டீசண்டான ரன்களை எடுத்து அணிக்கு ஓரளவு உதவி செய்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.
இனி அவ்வளவு தான் மேட்ச் நம் கையை விட்டு போய் விட்டது என்றே நினைத்தனர். ஆனால் தனியொருவனாக போராடிய மணீஷ் பாண்டே 50 ரன்கள் அடித்து அணிக்கு மாபெரும் உதவி செய்தார். அதேபோல நவ்தீப் சைனியும், ஷர்துல் தாகூரும் தங்களது பங்கினை சிறப்பாக செய்தனர். கடைசியில் சூப்பர் ஓவர் வரை சென்றாலும் இந்திய அணி மாபெரும் போராட்டம் நடத்தி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புள்ளிவிவரம் ஒன்றை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இன்றைய போட்டியையும் சேர்த்து கடைசி 18 டி20 போட்டிகளில் மணீஷ் பாண்டே இந்திய அணியின், ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்து இருக்கிறார். அதில் ஒன்றில் கூட இந்தியா தோல்வி அடைந்தது கிடையாதாம். இதனால் அவரை இந்திய அணியின் 'லக்கி' வீரராக ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து இருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த மேட்சை 'நாங்க' ஜெயிப்போம்னு... நாங்களே 'நெனைக்கல'... சூப்பர் ஓவருக்கு 'மீம்ஸ்' போட்டு 'தெறிக்க' விடும் நெட்டிசன்கள்!
- Video: அதே 'டெய்லர்' அதே வாடகை... சூப்பர் ஓவரில் 'மீண்டும்' மோதிக்கொண்ட அணிகள்... 'திரில்' வெற்றியை தட்டிப்பறித்த கோலி!
- Video: அடேங்கப்பா! அம்புட்டு 'தூரத்துல' இருந்து அடிச்சாலும்... ஸ்டெம்ப 'தெறிக்க' விட்டு... விட்டதை புடிச்சுட்டாரே!
- 'இது என்ன புதுசா இருக்கு'... 'கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியில்’... ‘இப்டி எல்லாம் கூடவா கொண்டாடுவாங்க’... வைரலான வீடியோ!
- VIDEO: ‘விராட் கோலி விக்கெட் எடுக்க இவ்ளோ பெரிய ரிஸ்கா’.. யாருப்பா அவரு..?
- "வி மிஸ் யூ" தோனி.. : 'அவங்க' 2 பெரும் கொஞ்சம் ரன்லயே விக்கெட் ஆயிட்டாங்க...'தோனி இல்லாத மேட்ச் பார்க்க..'. இந்திய ரசிகர்கள் ஆதங்கம்...!
- சொன்ன 'சொல்ல' காப்பாத்துறதுல... 'அவர' அடிச்சுக்க முடியாது... இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்து 'ஓபனிங்' இறக்கி விட்ட கேப்டன்!
- புதிய 'கேப்டனின்' கீழ் களமிறங்கிய நியூசிலாந்து அணி... இந்தியாவை வென்று 'சாதனை' படைக்குமா?
- 'கோலி' செஞ்சது ரொம்பவே தப்பு... ஒருவேளை 'அவர்' இருந்துருந்தா... இவருக்கு தான் 'வாய்ப்பு' கெடைச்சு இருக்கும்!
- 'வேணும்னே'... 'இந்திய இளம் வீரரை'... 'புறங்கையால் இடித்த ஆஸ்திரேலிய வீரருக்கு'... 'ஐசிசியால் நேர்ந்த கதி'!