‘ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் வந்தாரு’.. அதுக்குள்ள மறுபடியும் காயமா?.. கலக்கத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் பும்ராக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று (24.01.2020) ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூஸிலாந்து வீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக முன்ரோ 59 ரன்களும், ராஸ் டெய்லர் 54 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 51 ரன்களும் எடுத்தனர்.இந்திய அணியை பொருத்தவரை பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா, சஹால், ஷர்துல் தாகூர் மற்றும் சிவம் டுபே தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இந்த நிலையில் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க, அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி (45) மற்றும் கே.எல்.ராகுல் (56) கூட்டணி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதனை அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் (58) தன் பங்கிற்கு அதிரடி காட்ட 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு பந்துவீசும்போது திடீரென காலில் காயம் ஏற்பட்டு மைதானத்தில் விழுந்தார். உடனே மைதானத்துக்கு வந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். சில நிமிடங்களுக்கு பின் மீண்டும் தனது ஓவரை பும்ரா வீசினார். முன்னதாக உலகக்கோப்பையின் போது ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை முடிந்து சமீபத்தில்தான் பும்ரா அணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
'விடுதிக்கு சாப்பிடச் சென்ற மாணவர்'... 'சடலமாக மீட்கப்பட்ட அவலம்!'... 'பள்ளிக்கூடத்தில் பரபரப்பு'...
தொடர்புடைய செய்திகள்
- Video: தர்மப்பிரபு நீங்க 'இங்கேயும்' வந்துட்டீங்களா?... பாய்ந்து 'பிடித்த' வீரரால்... பதறும் ரசிகர்கள்!
- அடிச்சு 'தூள்' கிளப்பிய நியூசிலாந்து... மார்டின் குப்தில், முன்ரோ தெறிக்க விட்டனர்... கடின இலக்குடன் களத்தில் இந்தியா...!
- Video: விக்கெட் கீப்பருனு 'அவர' சொன்னீங்க... திடீர்னு 'இவரு' வந்து நிக்கிறாரு... ரசிகர்கள் கேள்வி?
- சென்னைக்காக 'அள்ளிக்கொடுத்த' அதிரடி இளம்வீரர்... 'நெகிழ்ந்து' போன சிகிச்சை மையம்!
- VIDEO: ‘அடிச்ச வேகத்துல தெறிச்சு சிதறிய ஸ்டம்ப்’.. ‘என்னா வேகம்’.. மிரட்டிய இளம்வீரர்..!
- இப்டி செஞ்சா 'எப்டி' வெளையாடுறது?... 'கேள்வி' கேட்ட கேப்டன்... 'அப்பவே' சொல்லிருக்கலாமே பிசிசிஐ காட்டம்!
- 'அந்த' நாட்டுக்கு போறோம்... எங்கள 'ஞாபகம்' வச்சுக்கங்க... 'பகிரங்கமாக' சொன்ன இளம்வீரர்... ஏன்? என்ன ஆச்சு?
- அவருக்கு ‘அத’ பண்ணனும்னு ‘அவசியமே’ இல்ல... ‘ஆனாலும்’ பண்ணினாரு... நெகிழும் ‘பிரபல’ வீரர்...
- அவராகவே 'அப்படி' நினைத்து சொல்லிருக்கலாம் ... இதனால்தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை... பயிற்சியாளர் தகவல்...!
- 'அவ்ளோ' சதம் அடிச்சவர விட்டுட்டு... சின்ன பையன 'டீம்ல' எடுத்ததுக்கு... இதுதான் காரணமாம்?