Video: அதே 'டெய்லர்' அதே வாடகை... சூப்பர் ஓவரில் 'மீண்டும்' மோதிக்கொண்ட அணிகள்... 'திரில்' வெற்றியை தட்டிப்பறித்த கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி தற்போது வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி மணீஷ் பாண்டே(50), கே.எல்.ராகுல்(39), ஷர்துல் தாகூர்(20) ஆகியோரின் அதிரடியால் 165 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முன்ரோ(64), ஷெப்பர்ட் (57) நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இந்திய அணி வீரர்கள் செய்த பீல்டிங் தவறுகளால் மேட்சை நியூசிலாந்து அணி வென்றுவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய தாகூர் ராஸ் டெய்லர், மிட்செல் ஆகியோரை வெளியேற்றினார்.
விக்கெட் கீப்பர் ராகுலும் தன்னுடைய பங்குக்கு ஷெப்பர்ட்(57), சாண்ட்னர்(2) ஆகியோரை ரன் அவுட் செய்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 165 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இதையடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு ஷெப்பர்ட், முன்ரோ இருவரும் ஓபனிங் கொடுத்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா பந்து வீசினார். 1 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இந்திய அணி சார்பாக விராட் கோலி, ராகுல் இருவரும் களமிறங்கினர். போன போட்டியில் சூப்பர் ஓவரை வீசிய சவுதியே இந்தமுறையும் சூப்பர் ஓவரை வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ராகுல், அடுத்த பந்தில் 4 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தில் ராகுல் அவுட்டாக சஞ்சு சாம்சன் இறங்கினார். 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த கோலி, 5-வது பந்தில் பவுண்டரி அடித்து போட்டியை வென்றார். இதனை அடுத்து இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட இந்த டி20 தொடரில் 4-0 என முன்னிலை வகிக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "வி மிஸ் யூ" தோனி.. : 'அவங்க' 2 பெரும் கொஞ்சம் ரன்லயே விக்கெட் ஆயிட்டாங்க...'தோனி இல்லாத மேட்ச் பார்க்க..'. இந்திய ரசிகர்கள் ஆதங்கம்...!
- சொன்ன 'சொல்ல' காப்பாத்துறதுல... 'அவர' அடிச்சுக்க முடியாது... இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்து 'ஓபனிங்' இறக்கி விட்ட கேப்டன்!
- புதிய 'கேப்டனின்' கீழ் களமிறங்கிய நியூசிலாந்து அணி... இந்தியாவை வென்று 'சாதனை' படைக்குமா?
- 'கோலி' செஞ்சது ரொம்பவே தப்பு... ஒருவேளை 'அவர்' இருந்துருந்தா... இவருக்கு தான் 'வாய்ப்பு' கெடைச்சு இருக்கும்!
- 'வேணும்னே'... 'இந்திய இளம் வீரரை'... 'புறங்கையால் இடித்த ஆஸ்திரேலிய வீரருக்கு'... 'ஐசிசியால் நேர்ந்த கதி'!
- வயசாகிடுச்சு...அவரைத் தூக்கிட்டு 'இவருக்கு' வாய்ப்பு கொடுங்க... 'பிரபல' அணிக்கு ரசிகர்கள் கோரிக்கை!
- VIDEO: "இப்டி ஒரு 'ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பா'?!"... "நெகிழ்ந்த ரசிகர்கள்!"... "புகழ்ந்து தள்ளிய சச்சின்!"...
- 'அவரோட' விக்கெட் தானே வெற்றிக்கு காரணம்... அப்புறம் ஏன்? 'சூப்பர்' ஓவரை 'இவருக்கு' கொடுத்தீங்க?... 'ரகசியத்தை' உடைத்த துணை கேப்டன்!
- 'எங்களுக்கும் சூப்பர் ஓவருக்கும் ராசியே இல்ல...!' 'நல்லாவே விளையாடியும் ஜெயிக்க முடியாதது கஷ்டமா இருக்கு...' கலங்கும் வில்லியம்சன்...!
- "அந்த தவறுக்காக காத்திருந்தேன்..." "நினைத்தது போலவே நடந்தது..." 'ஹிட்மேன் ரோஹித்' சொல்லும் 'சிக்ஸர் ரகசியம்'...