உண்மையிலேயே 'காயம்' சரியாகிடுச்சா?... அவர 'பார்த்தா அப்டி... சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகின் அபாயகரமான டெத் பவுலர், உலகின் நம்பர் 1 பவுலர் என புகழப்படும் பும்ராவின் பந்துவீச்சு தற்போது மிகவும் மோசமாக சரிந்துள்ளது. குறிப்பாக ஒருநாள் தொடரில் பும்ரா விளையாடிய விதத்தை பார்த்த ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். 3 ஒருநாள் போட்டிகளிலும் 30 ஓவர்கள் முழுதாக வீசிய பும்ரா 167 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
காயத்தில் இருந்து மீண்டுவந்த பும்ரா தொடர்ந்து விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். இந்தியாவின் இந்த மோசமான தோல்விக்கு பும்ராவின் பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணம் என்பதால் ரசிகர்கள் பும்ராவின் காயம் குறித்து தற்போது சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இத்தனைக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற மாட்டேன் என்று அடம்பிடித்து, தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்து அணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் டிராவிட்டுக்கும், பும்ராவுக்கும் சிறு உரசல் கூட எழுந்து, கடைசியில் கங்குலி தலையிட்டு அதை சரி செய்ததாக கூறுவர். இந்த நிலையில் தான் தொடர்ந்து பும்ராவின் பார்ம் மிகவும் மோசமான ஒன்றாக மாறியுள்ளது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் பும்ரா விக்கெட் வேட்டை நடத்துவாரா? இல்லை இதேபோல தான் பந்து வீசி அதிர்ச்சி அளிப்பாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரராகவும் பும்ரா திகழ்கிறார். இவரின் பந்துவீச்சை நியூசிலாந்து வீரர்கள் அடித்து நொறுக்கியது போல, மற்ற வீரர்களும் அடிக்க ஆரம்பித்தால் மும்பை அணியின் நிலை மிகவும் மோசமாக மாறக்கூடும் அபாயம் உள்ளது. எனினும் பீனிக்ஸ் பறவை போல பும்ரா மீண்டெழ வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பும்ரா மீண்டும் பழைய பும்ராவாக மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்களுடன் இணைந்து நாமும் வேண்டிக்கொள்வோம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்டி மோசமா தோற்றுப் போனதுக்கு’... ‘அந்த இளம் வீரர் தான் காரணம்’... ‘அவர ஏன் இன்னமும் டீம்ல வச்சிருங்கீங்க’... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
- அவங்க 'ஜெயிச்சது' கூட பரவால்ல... ஆனா நீங்க 'செஞ்சது' தான்... கேப்டனுக்கு 'எதிராக' கொந்தளிக்கும் ரசிகர்கள்!
- Video: என்ன பாத்து 'எப்டி' நீங்க பேசலாம்?... ஸ்டம்பைத் 'தட்டித்தூக்கி' வழியனுப்பிய வீரர்... வீடியோ உள்ளே!
- ரன் எடுக்க ஓடும்போது மயங்கி விழுந்த ‘இளம்வீரர்’.. டாக்டர் கொடுத்த ‘ஷாக்’ ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்கள்..!
- ‘ரன் எடுக்கும்போது’... ‘நடுவழியில் நியூசிலாந்து வீரர் நின்றதால்’... ‘எழுந்த வாக்குவாதம்’... ‘சிறு புன்னகையுடன் கடந்த கே.எல் ராகுல்’!
- 'உங்க' சகவாசமே வேணாம்... 'முக்கிய' வீரர்களைக் கழட்டிவிட்டு... 'லக்கி' வீரருடன் களமிறங்கும் கேப்டன்?
- '3-வது முறையா கோப்பையை வெல்லணும்'... 'சைலண்ட்டாக வந்த புதிய ஃபீல்டிங் கோச்'... 'முன்னாள் விக்கெட் கீப்பர் நியமினம்'!
- வயிற்றுவலி, காய்ச்சலால் 'அவதிப்படும்' வீரர்கள்... தோத்துருவோமோன்னு 'பயமா' இருக்கு... நீங்க ரெண்டு பேரும் உடனே 'கெளம்பி' வாங்க!
- ‘மோதலில்’ முடிந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு பின்... வீரர்கள் செய்த காரியத்தால் ‘குவியும்’ பாராட்டுகள்!... ‘வைரல்’ வீடியோ...
- 'இந்திய வீரர்களை சீண்டிய பங்களாதேஷ் அணி... 'ஜூனியர் உலகக்கோப்பை' இறுதிப் போட்டியில் மோதல்... ஐசிசி நடவடிக்கை எடுக்குமா?'