VIDEO: ‘இதையும் அம்பயர் சரியா பார்க்கலையோ?’.. சர்ச்சையை கிளப்பும் அடுத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது ரிஷப் பந்த் அடித்த பவுண்டரி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 37 ரன்களும், ரிஷப் பந்த் 30 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் ஷகர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர். இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில் இப்போட்டியில் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை, இங்கிலாந்து அணியின் டேவிட் மலன் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அவர் கேட்ச் பிடித்த விதம் களத்தில் இருந்த இருந்த அம்பயர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், மூன்றாவது அம்பயரிடம் ரிவியூ கேட்டனர்.

அதில் டேவிட் மலன் கேட்ச் பிடித்தபோது, பந்து தரையில் பட்டதுபோல் இருந்தது. இதனால் அவர் சூர்யகுமாருக்கு நாட் அவுட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவுட் கொடுத்தார். இதனால் களத்துக்கு வெளியே இருந்த கேப்டன் கோலி சற்று கோபமடைந்தார்.

அதேபோல் வாசிங்டன் சுந்தர் அடித்த பந்தை பவுண்டரி லைனுலுக்கு அருகில் இருந்து இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் கேட்ச் பிடித்தார். இதுவும் அம்பயர்களுக்கு சந்தேகத்தை எழுப்பவே, மீண்டும் மூன்றாவது அம்பயரிடம் ரிவியூ கேட்டனர். அப்போது ஆதில் ரஷிதின் கையில் பந்து விழும்போது, அவரது கால் பவுண்டரி லைனில் பட்டதுபோல் இருந்தது. ஆனால் இதற்கும் மூன்றாவது அம்பயர் அவுட் எனக் கொடுத்தார். இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரின் மூன்றாவது அம்பயரின் முடிவை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் ரிஷப் பந்த் அடித்த சிக்ஸர் ஒன்றை அம்பயர் பவுண்டரி கொடுத்துவிட்டதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். தற்போது அதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்