‘எல்லாம் சரியாகிடுச்சு’!.. ‘தம்ஸ் அப்’ காட்டி திரும்ப வந்துட்டேன்னு சொன்ன இளம் வீரர்.. பிசிசிஐ கொடுத்த ‘சூப்பர்’ அப்டேட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் இங்கிலாந்தில் தங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து 10 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அதேபோல் இந்திய அணியின் மற்றொரு விக்கெட் கீப்பரான சாஹாவின் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே தர்ஹாமில் இங்கிலாந்தின் கவுண்ட்டி அணியுடன் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் இரண்டு விக்கெட் கீப்பர்களும் தனிமைப்படுத்தலில் உள்ளதால், இப்போட்டிக்கு கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.

தற்போது ரிஷப் பந்துக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு கொரோன தொற்று இல்லை என உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ரிஷப் பந்த் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. அதனால் விரைவில் இந்திய அணியினருடன் அவர் பயிற்சியில் ஈடுபடுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்