‘அவங்கதான் கவனமா ஆடணும் நாங்க இல்ல..’ அவரு விக்கெட் எனக்குத்தான்.. போட்டி குறித்து பிரபல வீரர் நம்பிக்கை..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில் அடுத்த மூன்று இடங்களைப் பிடிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பர்மிங்ஹாமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இந்நிலையில் இந்தப் போட்டி குறித்துப் பேசியுள்ள இங்கிலாந்து வீரர் மொயின் அலி, “இந்திய அணிக்காக விராட் கோலி ரன் சேர்க்க இங்கே வருகிறார். ஆனால் நான் அவரை ஆட்டமிழக்கச் செய்ய இங்கே இருக்கிறேன். பல பந்துவீச்சாளர்கள் அவரை ஆட்டமிழக்கச் செய்ய சிரமப்பட்டு இருக்கலாம். ஆனால் நான் விராட் கோலியை எளிதாக ஆட்டமிழக்கச் செய்வேன். அவர் எனது நண்பர் என்பதால் நான் அவரை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சிப்பேன்.
நாளைய ஆட்டம் எங்களுக்கு அழுத்தம் தராது. நாங்கள் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். எங்களுடன் மோதும் இந்திய அணி மீதுதான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. வெற்றி பெற்றால் அவர்கள்மீது ரசிகர்கள் அன்பைப் பொழிவார்கள், பாராட்டுவார்கள். ஆனால் தோற்றுவிட்டால் இந்திய வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சிப்பார்கள். அதனால் இந்தியா தான் கவனமாக விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்திய அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய பிசிசிஐ..! வைரலாகும் போட்டோ!
- ‘இவங்கள ஜெயிக்கறவங்களுக்குத் தான் வேர்ல்டு கப்..’ பிரபல முன்னாள் வீரர் கருத்து..
- ‘இந்திய-பாகிஸ்தான் மோதிய ஆட்டம்’... 'புதிய வரலாறு படைத்தது'!
- ‘சிறப்பாக விளையாடுவதற்கு நான் மட்டுமே காரணம்..’ வெற்றிக்குப் பிறகு பேசியுள்ள இந்திய வீரர்..
- 'ஸ்லோவா ஆடுறாரா?'.. 'மொத்த பிரஷரையும் எடுத்துக்குறாரு’ .. 'நாங்க கத்துக்கணும் அவர்ட்ட'.. நெகிழும் வீரர்!
- 'அரைசதம் எடுத்தாலும் மறைமுகமாக'... 'தோனியை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்'!
- ‘இந்தியா வேண்டுமென்றே 2 போட்டிகளில் தோற்கும்..’ முன்னாள் வீரர் கூறும் அதிர்ச்சிக் காரணம்..
- 'ஆல்ரவுண்டர்'ன்னு சொன்னது ஒரு குத்தமா'... 'இந்திய வீரரை வச்சு செஞ்ச ரசிகர்கள்'... வைரலாகும் மீம்ஸ்!
- 'தோனி, விராட் கோலியின் ஒரே மாதிரியான ஷாட்'... 'பிரபஞ்சத்துடன் ஒப்பிட்ட சிஎஸ்கே'!
- ‘மேட்சில் இந்திய வீரர்கள் செய்த காரியம்..’ எதிர்ப்புத் தெரிவித்த இந்திய ரசிகர்களுக்குக் குவியும் பாராட்டுகள்..