‘3 ஓவர், 3 விக்கெட், ஒரு ரன் கூட போகல’!.. இந்திய பேட்டிங் ஆர்டரை ‘சுக்குச்சுக்கா’ நொறுக்கிய வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது பகலிரவு டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் சிப்லே களமிறங்கினர். இதில் சிம்லே டக் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோவும் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.
இதனை அடுத்து வந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 17 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இவரது விக்கெட்டை கேப்டன் கோலி அக்ரோஷமாக கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 112 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 53 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியை பொறுத்தவரை அக்சர் பட்டேல் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் ஹில் களமிறங்கினர். இதில் சுப்மன் ஹில் 11 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த புஜரா டக் அவுட்டாகி அதிர்ச்சிளித்தார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா-விராட் கோலி கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் கோலி 27 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
இதனை அடுத்து களமிறங்கிய ரஹானே (7), ரிஷப் பந்த் (1), அஸ்வின் (17) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். அடுத்ததாக வாசிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் டக் அவுட்டாகினர். கடைசியாக களமிறங்கிய பும்ரா 1 ரன்னில் அவுட்டாக, 145 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 66 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 5 விக்கெட்டுகளும், ஜாக் லீச் 4 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்சர் 1 விக்கெட்டும் எடுத்தனர். அதில் ஜோ ரூட், தான் வீசிய முதல் 3 ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்காமல் 3 (ரிஷப் பந்த், வாசிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல்) விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். மொத்தமாக 6.2 ஓவர்கள் வீசிய ஜோ ரூட் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட்டானதுக்கு பழிக்குபழி போல தொடர்ந்து இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அசத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாஜகவில் இணைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.. பரபரக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்..!
- 'நானும் அவரும் நல்ல ஃப்ரண்ட்ஸ்...' 'ஸோ நான் அதெல்லாம் பெரிய விஷயமாவே நெனைக்கல...' - விராட் கோலி கருத்து...!
- மம்தா பானர்ஜியின் கட்சியில் இணைந்த ‘பிரபல’ கிரிக்கெட் வீரர்.. வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறக்க திட்டமா..?
- தினேஷ் கார்த்திக் எடுக்கப் போகும் ‘புதிய’ அவதாரம்.. ‘செம’ ஹேப்பியில் ரசிகர்கள்..!
- அடடா..! ‘4 நாள் லேட்டா அடிச்சிட்டீங்களே’.. ஐபிஎல் ஏலத்தில் யாருமே கண்டுக்கல.. ஆனா இப்போ..! வியந்து பாராட்டிய அஸ்வின்..!
- இதுமட்டும் நடக்காம இருந்திருந்தா.. ‘தோனி’ கண்டிப்பா டி20 உலகக்கோப்பை விளையாடி இருப்பாரு.. ‘எல்லாத்தையும் தலைகீழா மாத்திருச்சு’!.. முன்னாள் வீரர் சொன்ன தகவல்..!
- ‘முடிவுக்கு வந்த பல வருச காத்திருப்பு’!.. 2 வருசத்துக்கு முன்னாடியே ‘Selector’ சொன்ன ஒரு பதில்.. வைரலாகும் பழைய ‘பேஸ்புக்’ கமெண்ட்..!
- 'டி 20' தொடருக்கான இந்தியன் 'டீம்' ரெடி... அணியில் இடம்பிடித்த '3' தமிழக வீரர்கள்.. இன்னும் யாரு எல்லாம் 'இருக்காங்க'ன்னு பாருங்க... செம 'சர்ப்ரைஸ்' லிஸ்ட்!!
- 'மிட்நைட்ல கூப்பிட்டு சொன்னாரு...' '15 கோடியா-ன்னு எந்திரிச்சு உட்கார்ந்தேன்...' 'அதுக்கு எத்தனை டாலர்னே எனக்கு தெரியாது...' - உற்சாகத்தில் ஜேமிஸன்...!
- 'நான் அர்ஜுனோட பவுலிங்கை பார்த்துருக்கேன்...' 'சச்சின் மகன் அப்படிங்கறதால செலக்ட் பண்ணல...' - மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் கருத்து...!