‘2-வது டெஸ்ட் போட்டி’.. டிக்கெட் எடுத்து ஆர்வமுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.. சேப்பாக்கம் மைதானத்தில் கட்டுப்பாடுகள் என்னென்ன..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கிற்கு பின் இந்தியாவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் முதல் போட்டி இதுதான். அதனால் பாதுக்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2-வது டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ‘நாங்கள் தங்கியுள்ள பயோ பபுளில் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் பார்வையாளர்கள் விவகாரத்திலும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின் போது, பவுண்டரி லைனை கடந்து ஸ்டேண்டுக்குள் விழும் பந்துகளை எடுத்துக்கொடுக்க தன்னார்வலர்கள் இருந்தனர். அதேபோல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும், 2-வது டெஸ்ட் போட்டியிலும் தன்னார்வலர்கள் இருப்பார்கள். அவர்கள் பந்தை கொடுப்பதற்கு முன்னர் சானிடைசர் அப்ளை செய்து வீரர்களிடம் பந்தை கொடுக்கின்றனர். அந்த பந்தை வாங்கும் வீரரின் கைகளிலும் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

2-வது டெஸ்ட் போட்டியில் 50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில் ஒருவர் விட்டு ஒருவர் நாற்காலிகளில் அமர வைக்கப்பட்ட உள்ளனர். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் உறுதி செய்யப்படும். மருத்துவ உதவிகளும் கொடுப்பதற்கு மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பார்கள். முகக்கவசம் அணிவது அவசியம். மைதானத்தின் 17 நுழைவிலும் உடல் வெப்பம் பரிசோதனை செய்த பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்களில் யாரேனும் இருமினாலோ அல்லது தும்மினாலோ சம்மந்தப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டு, மைதானத்திலிருந்து வெளியேற வேண்டி இருக்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்