‘மோசமான சாதனையைப் பதிவு செய்த இந்திய அணி..’ ஆப்கன் பந்துவீச்சால் முடக்கம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசவுத்தாம்டனில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 224 ரன்கள் எடுத்துள்ளது.
உலகக் கோப்பையில் இதுவரை இந்திய அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகள் பெற்று 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலி 67, கேதார் ஜாதவ் 52, விஜய் சங்கர் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்நாளில் 2வது முறையாக இந்த ஆட்டத்தில் தோனி ஸ்டம்ப்டு ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மான், ரஹ்மத் ஷா, ரஷீத் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும், நயீப் மற்றும் மொகமது நபி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை எடுத்துள்ளது. 2010க்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் இந்திய அணி எடுத்த குறைவான ரன்கள் இதுவே. உலகக் கோப்பை போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஷாப்பிங்' மாலில் 'துரத்தி துரத்தி'... பிரபல வீரரிடம் 'ரசிகரின் இழிவான' செயல் ... வைரலாகும் வீடியோ!
- ‘ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இணையப் போகும் வீரர்..’ எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்..
- ‘நடந்தது என்னமோ உண்மைதான்’.. அப்போ அடுத்த போட்டியில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு? .. பிரபல வீரர் சொன்ன பதில்!
- ‘சச்சின், லாராவின் இமாலய சாதனை’... 'முறியடிக்க காத்திருக்கும் இந்திய வீரர்'!
- 'ஹேப்பினஸ் என்பது'.. 'மைதானத்திலேயே நிகழ்ந்த'.. 'நெகிழ்ச்சியான சம்பவம்'.. வீடியோ!
- 'இந்தியா-ஆஃப்கானிஸ்தான் போட்டி'... 'மழைக்கு வாய்ப்பு?'
- ‘இந்தியா பற்றிப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்..’ கடும் எதிர்ப்புக்குப் பிறகு ட்வீட் நீக்கம்..
- ‘இவ்வளவு மோசமா நான் எங்கயுமே பாத்ததில்ல..’ புலம்பித் தள்ளிய இந்திய வீரர்..
- 'இந்திய அணியில் இவர்தான் பெஸ்ட்'... 'பயிற்சியாளரின் சுவாரஸ்யமான பதில்'!
- ‘பறிபோன இங்கிலாந்து தொடர்’.. வயதில் குளறுபடி, இளம் வீரருக்கு தடை விதித்த பிசிசிஐ..! அதிர்ச்சியில் இந்திய அணி..!