‘47 வருஷ ரெக்கார்ட்’.. முதல் போட்டியிலேயே தகர்த்த ரோஹித் ஷர்மா-மயங்க் அகர்வால் கூட்டணி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா-மயங்க் அகர்வால் கூட்டணி 47 ஆண்டுகால சாதனை ஒன்றை முறியடித்துள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (02.10.2019) விசாகப்பட்டிணம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 202 ரன்களை எடுத்தது. இதில் ரோஹித் ஷர்மா 115 ரன்களும், மயங்க் அகர்வால் 84 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்கமால் உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியதன் மூலம் ரோஹித் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் கூட்டணி ஒரு விநோத சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 1972 ஆண்டு இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட்  போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்காத வீரர்கள் முதல் முறையாக களமிறங்கினர். அதில் கவாஸ்கர் மற்றும் அறிமுக ஆட்டக்காரர் ராம்நாத் பார்கர் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 47 வருடங்களுக்கு பிறகு ரோஹித் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் கூட்டணி இந்த சாதனையை செய்துள்ளது.

BCCI, INDVSA, TEAMINDIA, TEST, ROHITSHARMA, CRICKET, MAYANKAGARWAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்