‘ஆரம்பமே இரட்டை சதம்’.. ‘மிரண்டுபோன தென் ஆப்பிரிக்கா’ பட்டைய கெளப்பிய பாட்னர்ஷிப்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் கூட்டணி முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. நேற்றைய ஆட்ட நேரமுடிவில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 202 ரன்ளை எடுத்தது. அதில் ரோஹித் ஷர்மா (115) தனது சதத்தையும், மயங்க் அகர்வால் தனது (84) அரைசத்தையும் நிறைவு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா 176 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய புஜாரா 6 ரன்னிலும், விராட் கோலி 20 ரன்னிலும் அவுட்டாகினர். ஆனால் மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் இரட்டை சதம் (215) அடித்து அசத்தினார். இந்நிலையில் தேநீர் இடைவேளை நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 450 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.

BCCI, ROHITSHARMA, INDVSA, TEST, CRICKET, MAYANKAGARWAL, TEAMINDIA, DOUBLEHUNDRED, CENTURY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்