தலைவா ‘வேறலெவல்’.. யாக்கர் மன்னனுக்கு காத்திருந்த ‘சர்ப்ரைஸ்’.. பிசிசிஐ வெளியிட்ட ‘அசத்தல்’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டி20 அணியில் இடம்பிடித்த நிலையில் மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தனது துல்லியமான யாக்கர்களால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தமிழக வேகப்பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன். தனது சிறப்பான பந்துவீச்சால் சர்வதேச வீரர்களையும் மிரள வைத்தார். அதில் பேட்டிங் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ்-ஐ தனது யார்க்கர் மூலம் போல்ட் அவுட்டாக்கியது யாராலும் மறக்க முடியாது. அதேபோல் தனது கனவு விக்கெட்டான இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே கேப்டனுமான தோனியையும் அவுட்டாக்கி அசத்தினார்.

இந்தநிலையில் நடராஜனுக்கு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டி20 அணியில் இடம் கிடைத்தது. நீண்ட நாள் இதற்காக தவம் இருந்த நடராஜனுக்கு உரிய வாய்ப்பு கிடைத்தது. இந்திய வீரர்களுடன் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.

இந்த கிரிக்கெட் தொடரில் ரெட்ரோ உடை எனப்படும் 1992 இந்திய அணியின் பழைய உடை வடிவத்தில் ஜெர்சி அணிய உள்ளது. அந்த உடையை அணிந்து இந்திய வீரர்கள் பலரும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். அதேபோல் நடராஜனும் அந்த சிறப்பு ஜெர்சியுடன் போட்டோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். இதுதான் நடராஜன் அணியும் முதல் இந்திய அணியின் ஜெர்சி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலானது.

இந்தநிலையில் டி20 மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிலும் நடராஜன் இடம்பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதால், அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இது தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் நடராஜனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்