'இந்த' 3 தவறுகள் தான்... இவ்ளோ மோசமான தோல்விக்கு காரணம்!.. அதிர்ச்சி ரிப்போர்ட்!.. என்ன செய்யப்போகிறார் கேப்டன் கோலி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

3வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்த மூன்று தவறுகள் தெரியவந்துள்ளன.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றன. தொடர் 1-1 என்று இருந்த நிலையில் நேற்று மூன்றாவது போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 156 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து இன்னிங்சை முடித்துக் கொண்டது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி இந்திய அணியின் இந்த ஸ்கோரை 18.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் அதிரடியாக ஆடிய பட்லர் 52 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அணியில் நடந்த சில தவறுகளால் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதற்கிடையே, இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடைய காரணமாக இருந்த 3 காரணங்கள் வெளிவந்துள்ளது.

ஐசிசி தரவரிசை பட்டியலில் டி20 பேட்ஸ்மேன்களில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக விளங்கும் கேஎல் ராகுல் தொடரில் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்த்தால் முதல் இரண்டு போட்டிகளில் 1,0 ஆகிய ரன்களை குவித்தார். இந்நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் மீண்டும் டக் அவுட்டாகி அனைவரையும் ஏமாற்றினார். இவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை எடுத்து இருந்தால் ஒருவேளை இந்திய அணியின் ஸ்கோர் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும்.

ஒருகட்டத்தில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பண்ட் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒரு தவறான அழைப்பினால் ரன் அவுட் ஆனார். 23 ரன்கள் எடுத்த நிலையில் தனது இருபதாவது பந்தில் 2 ரன்கள் அடித்து விட்டு கிரீசை தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் வந்து இவரை கடந்து சென்றது எதிர் முனையில் விராட்கோலி கொடுத்த தவறான அழைப்பினால் இவரும் மறுக்காமல் மூன்றாவது ரன்னை வேகமாக ஓடினார். வேகமாக ஓடியும் பயனில்லாமல் ரன் அவுட் ஆனார்.

விராட் கோலி தவறான அழைப்பு விடுத்தும் இவர் அதை மறுப்பு தெரிவித்து இன்னும் கொஞ்சம் ஆடி இருந்தால் அணியின் ஸ்கோர் வேறாக இருந்திருக்கும். தேவையில்லாத ரன்அவுட் அணியின் ஸ்கோரை குறைத்து விட்டது என்று சொல்லலாம்.

முன்பு நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் 44 மற்றும் 34 ரன்கள் என அதிகப்படியாக கொடுத்திருந்த நிலையிலும் மூன்றாவது போட்டியிலும் சாஹால் ஆடினார். இவரை திரும்ப திரும்ப பவர் பிளே ஓவர்களில் பந்துவீச வைத்து கோலி அந்தத் தவறை செய்தார்.

2 ஓவர்கள் வீசிய சாஹாலின் ஓவர்களில் 25 ரன்கள் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் அடித்தார்கள். பவர் பிளே ஓவர்களில் நன்றாக வீசக்கூடிய வாஷிங்டன் சுந்தர் இருந்தும் சஹாலுக்கு பந்துவீச கொடுத்தது மிகப்பெரிய தவறாக நேற்று அமைந்தது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்