“என்னை எல்லாம் ‘இந்த’ ஐபிஎல் டீம்-ல எடுக்கமாட்டங்க..!” என்ன சொல்றீங்க அஸ்வின்..? அப்போ ‘அந்த’ டீம்-ல வாய்ப்பு இருக்கா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 2022-க்கான ஏலம் எடுக்கும் நிகழ்வு நெருங்கி வரும் சூழலில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆன அஸ்வின் தான் எந்த அணிக்காக விளையாடுவார் என்பது குறித்து ஒரு சின்ன ஹின்ட் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் போட்டித் தொடரைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியைச் சேர்ந்த 4 வீரர்கள் வரையில் தக்கவைத்துக் கொள்ள முடியும். தக்கவைத்துக் கொள்ளப்படும் 4 வீரர்களுள் 3 இந்தியா சார்ந்த வீரர்களும் அதிகபட்சமாக 2 வெளிநாடு சார்ந்த வீரர்களும் இருக்கலாம். புதிதாக வரும் ஐபிஎல் 2022 முதல் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் இணைகின்றன. இந்த அணிகள் தக்கவைத்துக் கொள்ளப்படாத வீரர்களில் இருந்து 3 பேரை அவர்களே தேர்ந்தெடுத்து முதலில் எடுத்துக் கொள்ளலாம்.

ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள வேளையில் அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அஸ்வின் மற்றும் ஷ்ரேயார் ஐயர் ஆகிய இருவரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக தக்கவைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். அஸ்வின் கூறுகையில், “இந்த முறை டிசி-யில் ஷ்ரேயார் இல்லை. நான் இல்லை. வேற யாராவது வருவார்கள். என்னை தக்கவைத்துக் கொண்டு இருந்தால் இந்நேரம் அந்த விஷயம் எனக்குத் தெரிந்து இருக்கும்” எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) இருந்து 2019 ஐபிஎல் சீசன் தொடருக்காக டெல்லி அணியால் வாங்கப்பட்டவர் அஷ்வின். டெல்லி அணிக்காக விளையாடிய 28 இன்னிங்ஸில் இதுவரையில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். மற்றொரு புறம் ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிடல்ஸ்) அணிக்காக 2.6 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். 2018-ம் ஆண்டு தக்கவைக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியின் கேப்டன் ஆகவும் உயர்ந்தார்.

2019-ம் ஆண்டு ப்ளே-ஆஃப்ஸ் வரையில் டெல்லி அணியைக் கொண்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயர், 2020-ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான பைனல்ஸ் வரை கொண்டு வந்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அந்த போட்டியில் வென்றனர். டெல்லி அணிக்காக இதுவரையில் 86 இன்னிங்ஸ் விளையாடி உள்ள ஷ்ரேயாஸ் ஐயர் 1916 ரன்கள் குவித்துள்ளார். இதில் 16 அரை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணி தற்போது தங்களது கேப்டன் ரிஷப் பண்ட்-ஐ தக்கவைத்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது. 2021-ம் ஐபிஎல் போட்டித் தொடரில் ப்ளே-ஆஃப் சுற்று வரையில் டெல்லி அணியைக் கொண்டு வந்தார் பண்ட். இந்நிலையில் 2022 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் புதிதாக வந்துள்ள அணிகளில் ஏதாவது ஒன்றில் ஏலம் எடுக்கப்படுவாரா? இல்லை சென்னை அணிக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர்.

CRICKET, RASHWIN, DELHICAPITALS, CSK, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்