‘அந்த ரெண்டு பிளேயர்கள் இல்லாமலேயே ஜெயிச்சுட்டோம்’... ‘ரொம்ப பெருமையா இருக்கு’... ‘போட்டிக்கு பின்பு கேப்டன் கோலி கருத்து’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 2-வது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
தொடரை வென்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது, ‘ஒரு அணியாக ஒற்றுமையாக விளையாடி தொடரை வென்றது மகிழ்ச்சி. உண்மை என்னவென்றால், ஒருநாள், டி20 போட்டிகளில், ரோகித் சர்மா, பும்ரா போன்ற வளர்ந்த திறமையான வீரர்கள் இல்லாமல் தொடரை வென்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அணியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் 14 போட்டிகளுக்குள் விளையாடிய அனுபவம் உள்ள இளைஞர்கள். ஒவ்வொருவரும் அவர்களின் திட்டத்தை நன்கு உணர்ந்து களத்தில் செயல்படுத்தினார்கள். இளம் வீரர்கள் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்தி பங்களிப்புச் செய்தார்கள்.
கடந்த 2016-ல் ஹர்திக் பாண்ட்யா அணிக்குள் வந்ததே அவரின் முழுத் திறமையால்தான். உண்மையான திறமைசாலி அவர். இது அவருக்கான நேரம் என்பதை ஹர்திக் உணர்ந்திருக்கிறார். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் அணிக்கு மிகப்பெரிய சொத்தாக ஹர்திக் பாண்ட்யா மாறி எந்தப் போட்டியையும் வெல்லும் திறமை படைத்தவராக மாறுவார்.
அவரி்ன் திட்டம் சரியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏபிடி போன்ற ஷாட்டை நான் ஆடியபோது ஆன்ட்ரூ டை கூட எதிர்பார்க்கவில்லை. இன்று இரவு ஏபிடிக்கு என் ஷாட் குறித்து தெரிவிப்பேன்' என்று கோலி தெரிவித்தார்.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன்தான். அவரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால்தான் இலக்கில் 10 ரன்கள் குறைந்தது என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.
ஆனால், கேப்டன் விராட் கோலி தனது பேச்சில் ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் குறித்து பெருமிதமாகக் குறிப்பிட்ட நிலையில், நடராஜனின் பந்துவீச்சை பாண்ட்யா அளவுக்கு பெரிதாகக் குறிப்பிடாமல் இருந்தது ஏனோ எனத் தெரியவி்ல்லை என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை ரோகித் சர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அந்த 2 நாடுகளுக்கும் ஓ.கே.’... ‘இந்தியாவிலும் அவசரகால அனுமதிக்கு’... முதன்முதலாக விண்ணப்பித்த நிறுவனம்’...!!!
- 'கண்டிப்பா அதுக்கெல்லாம் உரிமை இருக்கு...' 'விவசாயிகள் போராட்டம் குறித்து...' - ஐ.நா. செய்தித்தொடர்பாளர் கருத்து...!
- 'டி20 போட்டியில் முத்திரை பதித்த 2 தமிழர்கள்’... ‘தெறிக்கவிட்ட இந்திய அணியின் மாற்று வீரர்’... ‘போராடி தோற்றுப்போன ஆஸ்திரேலியா அணி’...!!!
- ‘நடராஜன் இதைப் பண்ணினால்’... ‘கேப்டன் கங்குலிக்கு அவர் எப்படியோ’... ‘அதுமாதிரி கோலிக்கு இவர் இருப்பார்’... ‘பாராட்டி, அறிவுரை வழங்கிய முன்னாள் பவுலர்’...!!!
- 'பவர்ப்ளே'ல எடுத்த விக்கெட்... நடராஜனுக்காக டீம்-ஐ மாற்றிய கோலி!.. 'அந்த' இடம் இனிமே 'நட்டு'வுக்கு தான்!'.. 'டாப் வீரர்' கொடுத்த சர்ப்ரைஸ்!
- "'தோனி' சொல்லிக் குடுத்த 'விஷயம்' தான் அது... அத அப்டியே செஞ்சும் காட்டிட்டேன்..." 'மனம்' திறந்த 'ஜடேஜா'!!!
- ‘நாட்டுக்காக விளையாடிய அந்த அனுபவம்’... ‘போட்டிக்கு பின்பு’... ‘யாக்கர் மன்னன் நடராஜனின் முதல் ட்வீட்’...!!!
- 'நடராஜனின் கிரிக்கெட் பின்னணி’... ‘போட்டி முடிந்த உடன் புகழ்ந்து தள்ளிய’... ‘இந்திய அணியின் ஆல் ரவுண்டர்’...!!!
- 'நட்டு... யார்க்கர் நட்டு'!.. 'கேள்விபட்டிருக்கியா?'.. அந்த 2 ஓவர்ல... எல்லாரையும் செஞ்சுவிட்டாரு... இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த சொத்து நடராஜன்!.. ஏன்?
- 'அவங்க இடத்துக்கே போய்... அவங்கள மிரள வச்சுடீங்க!'... 'இந்த தருணம் எங்களுக்கு எப்படி இருக்கு தெரியுமா!?'.. யார்க்கர் கிங் நடராஜனுக்கு... நடிகர் சிவகார்த்திகேயன் லவ்லி மெசேஜ்!!