“நீங்க தோனி ரசிகரா இருந்தா.. இதை முதல்ல அவர்கிட்ட இருந்து கத்துக்கோங்க”.. ரிஷப் பந்துக்கு சேவாக் முக்கிய அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 40-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 57 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியை பொறுத்தவரை குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முஸ்தாபிஸூர் 3 விக்கெட்டுகளும், அக்சர் படேல் மற்றும் சேத்தன் சக்காரியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 42 ரன்களும், ரோவ்மேன் பவல் 33 ரன்களும் எடுத்தனர். இதில் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், ரிஷப் பந்திற்கு முக்கிய அறிவுரை கூறியுள்ளார். அதில், ‘டெல்லி அணிக்கு ரிஷப் பந்த் முக்கிய வீரர். தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தாலும் போட்டியின் நடு ஓவர்களில் ரன் குவிப்பது முக்கியம். ரிஷப் பந்த் கடைசி ஓவரில் 20-25 ரன்கள் எடுக்கும் திறன் கொண்டவர். ஆனால் அதற்கு அவர் கடைசி ஓவர் வரை மைதானத்தில் இருக்க வேண்டும். அவர் தோனி ரசிகராக இருந்தால், அவரிடம் இருந்து இதை ரிஷப் பந்த் கற்றுக்கொள்ள வேண்டும்’ என சேவாக் கூறியுள்ளார். நேற்றைய போட்டியில் 5 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பந்த் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்