"இன்னைக்கி மட்டும் அது நடக்கணும்,,.. அவருக்குக் கண்டிப்பா பிரச்சனை தான்??!!"... சிக்கலில் 'கோலி'??... பரபரப்பு 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த தொடரில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மூன்று முறை மோதியுள்ள நிலையில், மூன்று போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றி கண்டுள்ளது. இதுவரை மும்பை அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்ற முயற்சி செய்யும்.
டெல்லி அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிரான தோல்விகளுக்கு இன்று பழி தீர்க்க முயலும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு வெற்றிகரமான கேப்டனாக ஐபிஎல் தொடரில் வலம் வரும் நிலையில், இதுவரை மும்பை அணி கைப்பற்றிய 4 கோப்பைகளும் இவரது தலைமையில் தான் கிடைத்தது.
அது மட்டுமில்லாமல் பும்ரா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான் உள்ளிட்ட பல வீரர்களை மும்பை அணி மூலம் ரோஹித் மிக சிறந்த வீரர்களாக உருவாக்கியுள்ளார். தான் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் சிறந்த தலைவனாகவும் அணியை வழிநடத்திச் சென்றுள்ளார்.
ஆனால், மறுபக்கம் பெங்களூர் அணியை 8 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை ஒருமுறை கூட பெங்களூர் அணிக்காக கோப்பையை கைப்பற்றியதில்லை. இந்த முறையும் அணியில் படிக்கல், சாஹல், டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர் என சிறந்த வீரர்கள் இருந்தும் அந்த அணியால் இறுதி போட்டிக்கு முன்னேற முடியவில்லை.
வழக்கம் போல, இந்த முறையும் கேப்டனாக விராட் கோலி செய்த சில முடிவுகள் கடும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டது. இந்திய அணியில் சிறப்பாக கேப்டன் பதவியில் செயல்படும் கோலியால் ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த கேப்டனாக இதுவரை ஜொலித்ததில்லை. அடுத்த முறை பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி தொடரக்கூடாது என கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல முன்னாள் வீரர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.
கோலி கேப்டன்சியை விட ரோஹித் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதனால் இந்திய டி 20 அணிக்கு ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற கருத்து பரவி வருகிறது. அடுத்த ஆண்டு டி 20 உலக கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்பட்டால் நிச்சயம் அணி கோப்பையை வெல்ல முடியும் என்றும் தகவல் பரவி வருகிறது.
இதனால் இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால், ஒரு கேப்டனாக ஐபிஎல் கோப்பையை 5 ஆவது முறையாக கைப்பற்றிய பெருமை ரோஹித் ஷர்மாவைச் சேரும். அப்படி நடக்கும் பட்சத்தில் கோலிக்கு மாற்றாக டி20 தொடர்களுக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகம் எழலாம் என்ற நிலை உள்ளது. இதனால், கோலியின் டி 20 கேப்டன் பதவிக்கு நெருக்கடி ஏற்படலாம் என பரபரப்பு தகவலும் பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “எவ்ளோ சொல்லியும் கேக்காம... தொக்கா தூக்கி கொடுத்துட்டு... இப்போ அல்லல் பட்டு நிக்குறிங்களே!”.. ஐபிஎல் அணிக்காக ஃபீல் பண்ணும் ரசிகர்கள்!
- “அடுத்த மேட்சுக்கு டீம் ரெடி!!”.. மொத்தமா ‘நடந்த’ 7 அதிரடி மாற்றம்!! முக்கிய வீரர்கள் ‘வெளியே’!.. பிசிசிஐ எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!
- என்ன அய்யாச்சாமி...! 'சவுண்டவே காணோம்...' - பிரபல வீரரை டிவிட்டரில் கலாய்த்த அஸ்வின்...!
- 'செம்ம ஃபார்ம்ல இருந்த சன்ரைசர்ஸ் அணி!.. இப்படியா சொதப்புவீங்க?'.. மோசமான தோல்வி!.. 'அவங்க பண்ண தப்பு 'இது' தான்!'
- 'விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி!'.. யார்க்கர் கிங் நடராஜனுக்கு பிசிசிஐ கொடுத்த 'சர்ப்ரைஸ்'!.. திடீரென எடுக்கப்பட்ட முடிவு!.. பின்னணி என்ன?
- IPL2020: “கேப் முக்கியம் பிகிலு!!”.. பர்ப்பிள் கேப் வெல்லப்போவது யார்... முக்கிய 2 வீரர்களுக்கு இடையே தொடங்கிய கடும் போட்டி!
- ‘முதல் முதலில் இறுதிப் போட்டிக்கு போகும் ஐபிஎல் அணி!’.. ‘அடிச்சு துவம்சம் பண்ணி’ அடுத்த கட்டத்துக்கு போன வீரர்!..
- ‘என்ன மனுஷன்பா அவரு’... ‘தமிழக வீரரை பார்த்து வியக்கும் நெட்டிசன்கள்’... ‘வைரலாகும் கடைசி ஓவரால்’... ‘குவியும் ஆதரவு’...!!
- “புயலுக்கு முன்னே அமைதி”.. 'ஐபிஎல் வீரரின் வைரல் ஆகும்'.. அணி நிர்வாகம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஃபோட்டோ!
- ‘ஐபிஎல் கோப்பைய ஜெயிச்சா கட்டாயம் இத செய்வேன்!’.. 'ரசிகர்களுக்கு' சத்தியம் செஞ்சு கொடுத்த கேப்டன்!